/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கருப்பராயன் கோவில் திருவிளக்கு பூஜை
/
கருப்பராயன் கோவில் திருவிளக்கு பூஜை
ADDED : அக் 07, 2025 11:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே பிளிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்னிபாளையத்தில் எல்லை கருப்பராயன் கோவில் உள்ளது. இங்கு உலக நலன் மற்றும் பாதுகாப்பான பாரதம் வேண்டியும் திருவிளக்கு பூஜை நடந்தது.
இதில், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள குடியிருப்புகளை சேர்ந்த, 5,004 பெண்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி கருப்பராயன் கோவிலில் சிறப்பு பூஜை, அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அன்ன தானத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.