/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
5 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் கைது
/
5 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் கைது
ADDED : அக் 07, 2025 11:05 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கேரளாவை சேர்ந்த மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, 5 கிலோ 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாருக்கு மேட்டுப்பாளையம் ரயில் நிலையம் அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவை சேர்ந்த தன்ஷித், 35, அபிலாஷ், 32, அனாஸ், 31, ஆகியோர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 5 கிலோ 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.----