/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வருவாயை கொட்டிக் கொடுக்கும் 36 'பார்'கள் கரூர்காரர்கள் வசம்
/
வருவாயை கொட்டிக் கொடுக்கும் 36 'பார்'கள் கரூர்காரர்கள் வசம்
வருவாயை கொட்டிக் கொடுக்கும் 36 'பார்'கள் கரூர்காரர்கள் வசம்
வருவாயை கொட்டிக் கொடுக்கும் 36 'பார்'கள் கரூர்காரர்கள் வசம்
ADDED : ஆக 24, 2025 06:25 AM
கோவை : கோவை மாவட்டத்தில், அதிக வருவாய் ஈட்டிக்கொடுக்கும், 36 மதுக்கூடங்களுக்கான (பார்) உரிமத்தை கரூரை சேர்ந்தவர்கள் எடுத்துள்ளனர். மீதமுள்ள 56 'பார்'களையும் அடுத்த ஏலத்தில் எடுக்க திட்டமிட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 'டாஸ்மாக்' மதுக்கடைகளுக்கு அருகே நடத்தும் மதுக்கூடங்களுக்கான (பார்) ஏலம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட கலால் வரித்துறை துணை கமிஷனர் முருகேசன், கோவை மண்டல 'டாஸ்மாக்' முதுநிலை மேலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் முன்னிலையில், ஏலம் நடத்தப்பட்டது.
மொத்தம், 92 மதுக்கூடங்களுக்கு ஏலம் அறிவிக்கப்பட்டிருந்தது; ஆன்-லைன் முறையில் டெண்டர் கோரப்பட்டிருந்தது. வருவாய் கொட்டிக் கொடுக்கும், 36 மதுக்கூடங்களை கரூரை சேர்ந்தவர்கள் கைப்பற்றியிருக்கின்றனர்.
மீதமுள்ள, 56 மதுக்கூடங்களுக்கு, 134 பேர் விண்ணப்பித்திருந்தனர். சரியான ஆவணங்கள் இணைக்கப்படவில்லை; இணைத்த ஆவணங்களிலும் ஏராளமான தவறுகள் உள்ளதாக, தள்ளுபடி செய்யப்பட்டன. இக்கூடங்களுக்கு மட்டும் மீண்டும் ஏலம் நடத்த, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.