/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
படிக்கும்போதே சம்பாதிக்கும் கதிர் கல்லுாரி மாணவர்கள்
/
படிக்கும்போதே சம்பாதிக்கும் கதிர் கல்லுாரி மாணவர்கள்
படிக்கும்போதே சம்பாதிக்கும் கதிர் கல்லுாரி மாணவர்கள்
படிக்கும்போதே சம்பாதிக்கும் கதிர் கல்லுாரி மாணவர்கள்
ADDED : ஆக 26, 2025 10:51 PM

கோவை; மேலாண்மை துறை மாணவர்களுக்கு படிக்கும் போதே வருமானம் ஈட்டும் பயிற்சி முறை கதிர் பொறியியல் கல்லுாரியில் செயல்படுத்தப்படுகிறது. கல்லுாரி வளாகத்தில் இயங்கும், ஆரா எச்.ஆர். சொல்யூஷன்ஸ் நிறுவனம்இதை வழங்குகிறது.
பாட வகுப்பு முடிந்த பின், நேரடி பயிற்சி அளிப்பதுடன், வேலை வழங்கி மாணவர்கள் வருமானம் ஈட்ட வழி காட்டுகின்றனர். இந்த வருமானம் அவர்களின் படிப்பு மற்றும் சொந்த செலவுக்கு பயன்படுகிறது.
இதை அறிந்த, கோவை மாவட்ட துணை கலெக்டர் பிரசாந்த், மாணவர்களின் அனுபவம் மற்றும் இத்திட்டத்தின் பயனைக் கேட்டறிந்து வாழ்த்தினார்.
கதிர் நிறுவனங்களின் தலைவர் கதிர், துணை செயலாளர் விது பிரதிக் ஷா, ஆரா எச்.ஆர். சொல்யூஷன்ஸ் இயக்குனர் மிதிலேஷ், கதிர் நிறுவனங்கள் மேலாண்மை துறை இயக்குனர் குணசேகரன், செயல் இயக்குனர் கண்மணி, பேராசிரியர்கள் பகுத்தறிவு, கிரிவாசுகி ஆகியோர் பங்கேற்றனர்.