/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கம்பன் கலை மன்றம் சார்பில் கவியரங்கம்
/
கம்பன் கலை மன்றம் சார்பில் கவியரங்கம்
ADDED : ஜன 15, 2024 10:03 PM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி கம்பன் கலைமன்றத்தின் மாதாந்திர நிகழ்வாக, 'வள்ளுவமும், வாழ்வியலும்' என்ற தலைப்பில் கவியரங்கம், லயன்ஸ் கிளப் மண்டபத்தில் நடந்தது.
பெத்தநாயக்கனுார் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் விழா துவங்கியது. மன்றத்தின் துணைத்தலைவர் கவிஞர் ரமேஷ் சென்னியப்பன் வரவேற்றார். கவிஞர் பாபு தலைமை வகித்தார்.
கவியரங்கம், 11 தமிழாசிரியர்கள் இணைந்து நடத்தினர்.
கல்வி, வாழ்க்கைத்துணை நலம், ஊக்கமுடமை, நட்பு, காதல் சிறப்பு, குறிப்பறிதல், அறிவுடமை, அன்புடைமை, செங்கோன்மை, பண்புடைமை, உழவு என்ற, 12 தலைப்புகளில் கவிஞர்கள் பேசினர்.
புலவர் மணிமொழி நன்றி கூறினார். கம்பன் கலை மன்ற நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.