/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் காயகல்ப குழுவினர் ஆய்வு
/
அரசு மருத்துவமனையில் காயகல்ப குழுவினர் ஆய்வு
ADDED : டிச 03, 2024 11:28 PM

பொள்ளாச்சி; மத்திய அரசின் துாய்மை பாரத திட்டத்தின் கீழ், சுகாதாரமாக இருக்கும் அரசு மருத்துவமனைக்கு ஆண்டுதோறும் காயகல்ப ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதில், சிறப்பாக உள்ள மருத்துவமனைக்கு, மாநில அளவில் முதல் பரிசு, இரண்டாம் பரிசு வழங்கப்படுகிறது.
மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தனித்தனியாக விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருது பொள்ளாச்சி அரசு மருத்துவனைக்கு இரண்டு முறை கிடைத்துள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், மாநில அளவிலான காயகல்ப ஆண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஈரோடு டாக்டர் பாவேந்தன், ஊட்டி ஆண் செவிலியர் கொடியரசன் குழுவினர், ஆய்வு செய்தனர்.
ரத்த வங்கி மற்றும் மருத்துவமனையில் உள்ள அனைத்து பிரிவுகளிலும் சுகாதாரம், சிகிச்சைகள் குறித்து ஆய்வு செய்தனர். ஆய்வின் போது, பொள்ளாச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜா மற்றும் டாக்டர்கள் உடன் இருந்தனர்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறுகையில், ''பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு, 10 லட்சம் ரூபாய் பரிசு இரண்டு முறையும், ஐந்து லட்சம் ரூபாய் பரிசு ஒரு முறையும் கிடைத்துள்ளது. தொடர்ந்து, இந்த முறையும் முதலிடம் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.