/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கே.சி.டி.பி.எஸ்., மாரத்தான்-25' போட்டி; பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஆர்வம்
/
'கே.சி.டி.பி.எஸ்., மாரத்தான்-25' போட்டி; பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஆர்வம்
'கே.சி.டி.பி.எஸ்., மாரத்தான்-25' போட்டி; பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஆர்வம்
'கே.சி.டி.பி.எஸ்., மாரத்தான்-25' போட்டி; பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஆர்வம்
ADDED : பிப் 17, 2025 11:15 PM

கோவை; பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
மேட்டுப்பாளையம் அருகே கல்லார்புதுார் கிராமத்தில், 1,500 பழங்குடியினர் குடும்பங்கள் வசிக்கின்றனர். விவசாயம், தேன் சேகரிப்பு போன்ற பாரம்பரிய தொழிலில் ஈடுபட்டுள்ள இம்மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில், கே.சி.டி., பிசினஸ் ஸ்கூல் சார்பில், 'கே.சி.டி.பி.எஸ்., மாரத்தான்-25' போட்டி நடத்தப்பட்டது.
குமரகுரு கல்லுாரி வளாகத்தில் நடந்த மாரத்தானில், பள்ளி, கல்லுாரி மாணவர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், பொது மக்கள் என, 400க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் திரட்டப்பட்ட நிதி, பழங்குடியின மக்களின் மேம்பாட்டுக்காக வழங்கப்பட்டது.
இதில், பள்ளி மாணவர் பிரிவில் நிதிஷ், மாணவியர் பிரிவில் கார்ஷினி ஆகியோரும், குமரகுரு நிறுவனங்களில் ஆண்கள் பிரிவில் முகமது ஆரிப், பெண்களில் அறிவுமதி ஆகியோரும், ஓபன் பிரிவு ஆண்களில் கிருஷ்ணகுமார், பெண்களில் பூங்கொடி ஆகியோரும் முதலிடம் பிடித்தனர்.
தொழில் துறை பிரிவில், 35 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் அகிலன், 40 வயதுக்கும் மேற்பட்டோரில் லட்சுமிகாந்தன், 45 வயதுக்கும் மேற்பட்டோரில் வீரா ஆகியோரும் பரிசுகள் வென்றனர். வெற்றி பெற்றவர்கள் பதக்கம், சான்றிதழ் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.