/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மக்களுடன் முதல்வர் முகாம் மனு நடவடிக்கை எடுக்க இன்று 'கெடு'
/
மக்களுடன் முதல்வர் முகாம் மனு நடவடிக்கை எடுக்க இன்று 'கெடு'
மக்களுடன் முதல்வர் முகாம் மனு நடவடிக்கை எடுக்க இன்று 'கெடு'
மக்களுடன் முதல்வர் முகாம் மனு நடவடிக்கை எடுக்க இன்று 'கெடு'
ADDED : ஜன 31, 2024 12:38 AM
கோவை;கோவை மாவட்டத்தில், 'மக்களுடன் முதல்வர்' முகாம்களில் பெற்ற மனுக்கள் மீது, இன்றைக்குள் தீர்வு காண, அரசு துறை அலுவலர்களுக்கு, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
அரசு துறை சேவைகள் ஒரே கூரையின் கீழ் கிடைக்கும் வகையில், 'மக்களுடன் முதல்வர்' என்கிற திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின், கடந்தாண்டு டிச., 18ல் கோவையில் துவக்கி வைத்தார். மாவட்டம் முழுவதும், 17 நாட்கள் நடத்திய முகாம்கள் மூலம், 77 ஆயிரத்து, 60 மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டன.
'மக்களுடன் முதல்வர்' திட்டத்தில் பெற்ற மனுக்கள் மீது, விதிமுறைக்கு உட்பட்டு, இன்றைக்குள் தீர்வு காண, அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, '50 சதவீத மனுக்களுக்கு உரிய தீர்வு ஏற்படுத்தி விட்டோம். தொடர்ந்து பரிசீலனை செய்து வருகிறோம். இலவச பட்டா கேட்பது; வகை மாற்றம் செய்வது உள்ளிட்ட சில மனுக்களுக்கு, உடனடியாக தீர்வு காண முடியாது.
ஒவ்வொரு மனுவையும் தனித்தனியாக ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது. இருப்பினும், தொடராய்வு செய்து விரைவுபடுத்தி வருகிறோம்' என்றனர்.