/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தரமான பம்புகள் தயாரிப்பில் நிபுணத்துவம் மிக்கது கீர்த்தி பம்ப்ஸ்
/
தரமான பம்புகள் தயாரிப்பில் நிபுணத்துவம் மிக்கது கீர்த்தி பம்ப்ஸ்
தரமான பம்புகள் தயாரிப்பில் நிபுணத்துவம் மிக்கது கீர்த்தி பம்ப்ஸ்
தரமான பம்புகள் தயாரிப்பில் நிபுணத்துவம் மிக்கது கீர்த்தி பம்ப்ஸ்
ADDED : செப் 30, 2025 10:29 PM

கீ ர்த்தி பம்ப்ஸ் ஒரு ஐ.எஸ்.ஓ., 9001 -2015, ஐ.எஸ்.ஓ., 14001: 2015, ஐ.எஸ்.ஓ., 45001: 2018 சான்றிதழ் பெற்ற, ஏ.இ.ஓ., மற்றும் எம்.எஸ்.எம்.இ., நிறுவனமாகும்.
கல்குவாரி, எம் சேன்ட் பம்பு, தீயை அணைத்தல், காகித ஆலைகள், மின் நிலையங்கள், பெட்ரோ கெமிக்கல்ஸ், சர்க்கரை, உரம், உப்பு நீக்கம், ஏர் கண்டிசனிங், மொத்த நீர் விநியோகம், நீர் நீக்கம், சுரங்கம் போன்ற அனைத்து தொழில் துறைகளின் தேவைகளுக்கு ஏற்றாற்போல், 350 க்கும் மேற்பட்ட மாடல்களில் பம்புகள் தயாரிக்கப் படுகின்றன.
கீர்த்தி பம்ப்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் சி.கந்தசாமியின் தலைமையின் கீழ், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்கா, மத்திய கிழக்கு, சிங்கப்பூர், ஆப்ரிக்கா, நேபாளம், பங்களாதேஷ் மற்றும் 20க்கும் மேற்பட்ட மேலை நாடுகளுக்கு சர்வதேச தரத்தில் உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யப்படுகிறது.
நிறுவனத்தின் தயாரிப்புகள் 'கீர்த்தி' என்ற பிராண்ட் பெயரில் சந்தைப்படுத்தப் படுகின்றன.
மிகவும் திறமையான வடிவமைப்பு மற்றும் தரக்குழு, பவுண்டரி மற்றும் பேப்ரிகேஷன் யூனிட், முழுமையாக பொருத்தப்பட்ட சோதனை ஆய்வகம், முழு கணினி மயமாக்கப்பட்ட இயந்திரங்கள், அசெம்பளி யூனிட் மற்றும் வாடிக்கையாளர் சேவைக் குழு ஆகியவை உள்ளன.அனைத்து தொழிற் சாலைகளிலும், தங்கு தடையின்றி நீடித்து உழைப்பதற்கு ஏற்ப, குறைந்த மின்சாரம் மற்றும் பராமரிப்பு செலவில், தேய்மானம் மற்றும் அரிப்பு இன்றி அனைத்து விதமான திரவங்களையும் கையாள்வதற்கு ஏற்றாற் போல் தனித்துவமாக வடிவமைக்க படுகிறது.பல வித தொழிற்சாலைகளுக்கேற்ப, 0.5 எச்.பி., முதல் 1000 எச்.பி., வரையிலும் 350 மாடல்களில் பம்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. அனைத்து மின்சார மோட்டார் மற்றும் டீசல் என்ஜின்களால் இயங்கக் கூடிய முறையில் வடிவமைக்கப்படுகிறது.
திரவங்களின் தன்மைக்கு ஏற்ப, சிஎப் 8, சிஎப் 8 எம், சிடிஎம்சியு, டபுள்யு.சி.பி. ஹாஸ்ட் அல்லாய் பி, ஹாஸ்ட் அல்லாய் சி, அல்லாய் 20 சதவீதம், இரண்டு சதவீதம் நிக்கல் சிஏ 15, சிஎன் 7எம், எஸ்எஸ் 304 எல், எஸ்எஸ் 316 எல், ஹைகிரோம், சி.ஐ., பிரான்ஸ் என பலவித உலோகங்களால் நீடித்து உழைக்கும் வகையில் உருவாக்கப்படுகிறது.