/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தென்னையில் கேரள வேர்வாடல் நோய் :தோட்டக்கலை அதிகாரிகள் கள ஆய்வு
/
தென்னையில் கேரள வேர்வாடல் நோய் :தோட்டக்கலை அதிகாரிகள் கள ஆய்வு
தென்னையில் கேரள வேர்வாடல் நோய் :தோட்டக்கலை அதிகாரிகள் கள ஆய்வு
தென்னையில் கேரள வேர்வாடல் நோய் :தோட்டக்கலை அதிகாரிகள் கள ஆய்வு
ADDED : ஜன 28, 2024 09:13 PM
ஆனைமலை:ஆனைமலை பகுதியில், கேரளா வேர்வாடல் நோய் குறித்து, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில், கேரளா வேர்வாடல் நோயினால், தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதை கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர்.
கடந்த சில வாரங்களுக்கு முன், அதிகாரிகள் குழுவினர் ஆய்வு செய்து சென்ற நிலையில், கேரளா வாடல் நோய் குறித்து ஆனைமலை பகுதியில் தோட்டக்கலைத்தறை அதிகாரிகள் கள ஆய்வு செய்து வருகின்றனர்.
ஆனைமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:
தோட்டக்கலைத்துறை சார்பாக, ஆனைமலை, சுப்பேகவுண்டன்புதுார், தாத்துார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தோட்டங்களில், கேரளா வாடல் பாதிப்பு குறித்து கள ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
கடந்த ஒரு வாரமாக கள ஆய்வு செய்து, பாதிப்புகள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறியப்பட்டு, பாதிக்கப்பட்ட மரங்கள் குறித்து கணக்கெடுக்கப்படுகிறது.
விவசாயிகள், தோட்டக்கலைத்துறையை அணுகி அலுவலர்களை அழைத்து தோட்டங்களில், நோய் பாதித்த மரங்களை காண்பித்து, அதனுடைய வீரியத்தை கருத்தில் கொண்டு, அதிகாரிகள் கூறும் அறிவுரைகளை பின்பற்றி, தென்னை மரங்களை பாதுகாத்துக்கொள்ளலாம்.
மேலும், மரங்களில் நோய்கள் கண்டறியப்பட்டால், கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு, அவர்கள் வாயிலாகவும் தோட்டக்கலைத்துறையை அணுகலாம்.
விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கிராம நிர்வாக அலுவலகங்களில் உள்ள நோட்டீஸ் பலகைகளிலும், தாசில்தார் அலுவலகத்தில் உள்ள நோட்டீஸ் பலகைகளிலும் கேரளா வாடல் நோய் குறித்து விளக்கங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் தோட்டக்கலைத்துறை அலுவலர்களால் ஒட்டப்படுகின்றன.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.