/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நல்ல நண்பர் போல் நடித்து திருடிய கேரள நபர் கைது
/
நல்ல நண்பர் போல் நடித்து திருடிய கேரள நபர் கைது
ADDED : செப் 23, 2025 05:16 AM
கோவை; குனியமுத்தூர் சுபலட்சுமி நகரை சேர்ந்தவர் அருண், 31; தனியார் நிறுவன சூப்பர்வைசர். கடந்த சில மாதங்களுக்கு முன் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த ஆரோன், 28 என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் நண்பரானார்.
ஆரோன், அருண் மற்றும் அவரது நண்பர்களை, கேரளாவுக்கு அழைத்தார். அருணும் நண்பர்களும் அங்கு சென்று சில நாட்கள் ஆரோனுடன் தங்கியிருந்தனர். பின்னர் ஆரோனை, கோவைக்கு வந்து தங்களுடன் தங்கியிருக்கும்படி கேட்டுக் கொண்டனர்.
ஆரோன் கடந்த மாதம் குனியமுத்தூருக்கு வந்து, அருண் மற்றும் அவரது நண்பர்களுடன் அறையில் தங்கினார்.
ஆக., 23-ம் தேதி அதிகாலை அருண் எழுந்து பார்த்த போது, ஆரோன் அறையில் இல்லை. பல இடங்களில் தேடிய போதும் கிடைக்கவில்லை. இரு ஐ-போன்கள், லேப்டாப், பைக் என, ரூ.2.80 லட்சம் மதிப்பிலான பொருட்கள் மாயமாகியிருந்தன.
அருணின் ஏ.டி.எம்., கார்டை திருடிச் சென்ற ஆரோன், அதில் இருந்த ரூ.75 ஆயிரத்தை திருடியதும் தெரிந்தது. குனியமுத்தூர் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார், கேரள மாநிலம் ஆலப்புழாவில் பதுங்கியிருந்த ஆரோனை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.