தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கேரள மாவோயிஸ்ட்டுக்கு   நிபந்தனை தளர்த்தி உத்தரவு 

கேரள மாவோயிஸ்ட்டுக்கு   நிபந்தனை தளர்த்தி உத்தரவு 

கேரள மாவோயிஸ்ட்டுக்கு   நிபந்தனை தளர்த்தி உத்தரவு 


ADDED : ஏப் 04, 2025 11:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 04, 2025 11:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; கேரள மாவோயிஸ்ட்டுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை, தளர்த்தி கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கோவை அருகே கருமத்தம்பட்டியில், சதி திட்டத்தில் ஈடுபட்டதாக மாவோயிஸ்ட்கள், கேரளத்தை சேர்ந்த ரூபேஷ்,54, மனைவி ஷைனி,52, அனுாப்,37, மற்றும் கண்ணன்,56, வீரமணி,69,ஆகியோர், மே 2015 ல், கோவை 'கியூ' பிரிவு போலீசாரால், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில், ைஷனி, கண்ணன், வீரமணி ஆகியோர் ஏற்கனவே ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். அனுாப் கடந்தாண்டு நவம்பரில், நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தார். கோவை கியூ பிரிவு போலீசில், தினசரி காலை மற்றும் மாலை ஆஜராகி கையெழுத்திட்டு வருகிறார்.

இந்நிலையில், நிபந்தனையை தளர்த்தக்கோரி, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் அனுாப் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிபதி விஜயா, மாதத்தில் ஏதாவது ஒரு திங்கள் கிழமை, காலை 10:30 மணிக்கு, கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் ஆஜராகி கையழுத்திடும் வகையில், நிபந்தனையை தளர்த்தி உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us