/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
26 ஆண்டு கல்வி சேவையில் கேசவ் வித்யா மந்திர் பள்ளி
/
26 ஆண்டு கல்வி சேவையில் கேசவ் வித்யா மந்திர் பள்ளி
26 ஆண்டு கல்வி சேவையில் கேசவ் வித்யா மந்திர் பள்ளி
26 ஆண்டு கல்வி சேவையில் கேசவ் வித்யா மந்திர் பள்ளி
ADDED : அக் 09, 2024 10:20 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி பாலக்காடு ரோட்டில், கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி அமைந்துள்ளது. பள்ளி முதல்வர் பிரகாஷ் கூறியதாவது:
பள்ளியின் தாளாளர் மாரிமுத்து மேற்பார்வையில், கடந்த, 26ஆண்டு காலமாக கல்வி சேவையை வழங்கி வருகிறது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ்2 வகுப்புகளில், 100 சதவீதம் தேர்ச்சியினை தொடர்ந்து வழங்கி வருகிறோம்.கிராமப்புற மாணவர்களும், நகர்ப்புற மாணவர்களுடன் போட்டியிடும் அளவுக்கு சிறந்த பயிற்சியினை நமது பள்ளி வழங்குகிறது.
கல்வியோடு பிற கலைகளிலும் மாணவர்கள் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, 15க்கும் மேற்பட்ட கல்வி இணைச் செயல்பாடுகளை கட்டணமின்றி வழங்கி வருகிறோம்.
மழலையர் வகுப்பு மாணவர்களுக்கு விளையாட்டு முறையில் கல்வி கற்பிப்பதோடு, கை, கண் ஒருங்கிணைப்பு செயல்பாடு முறையிலும் கற்பிக்கப்படுகிறது. ஆங்கில சொற்களை சரியாக உச்சரிப்பதற்கு ஒலி, ஒளி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
சிறந்த முறையில் மாண்டிசேரி பயிற்சி பெற்ற பல ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு கல்வி போதிக்கப்படுகிறது.
இவ்வாறு, கூறினார்.