UPDATED : மே 08, 2026 06:58 PM
ADDED : மே 08, 2026 06:51 PM

அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது. பள்ளியில், மாணவி அனுராகவி - 571 மதிப்பெண் பெற்று முதலிடமும், நந்தினி - 565 இரண்டாமிடமும், ரோஷன் அக்தர் - 554 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை, பள்ளி நிறுவனர் மற்றும் தாளாளர் மாரிமுத்து, பள்ளி செயலர் ரவிச்சந்திரன், பள்ளி முதல்வர் பிரகாஷ் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.
மாணவர்கள், ஆசிரியர்கள் முயற்சி மற்றும் கடின உழைப்பின் பலனாக இந்த வெற்றி கிடைத்துள்ளதாகவும், மாணவர் சேர்க்கை நடைபெறுவதாகவும் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
