/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காசாகிராண்ட் 'நெக்ஸ்ட் டவுன்' திட்டத்தில் சாவி ஒப்படைப்பு
/
காசாகிராண்ட் 'நெக்ஸ்ட் டவுன்' திட்டத்தில் சாவி ஒப்படைப்பு
காசாகிராண்ட் 'நெக்ஸ்ட் டவுன்' திட்டத்தில் சாவி ஒப்படைப்பு
காசாகிராண்ட் 'நெக்ஸ்ட் டவுன்' திட்டத்தில் சாவி ஒப்படைப்பு
ADDED : ஜன 24, 2025 11:03 PM
கோவை; கோவை 'காசாகிராண்ட் நெக்ஸ்ட் டவுன்' திட்டத்தில், வீடு வாங்கியவர்களுக்கு சாவி ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
புகழ் பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனமான காசாகிராண்ட், கோவை விளாங்குறிச்சியில் 'நெக்ஸ்ட் டவுன்' என்ற புதிய குடியிருப்பு வளாகத்தை கட்டியுள்ளது. இங்கு வீடு வாங்கியவர்களுக்கு, சாவி ஒப்படைக்கும் நிகழ்வு, காசா கிராண்ட் நெக்ஸ்ட் டவுன் வளாகத்தில் நடந்தது.
இது குறித்து, காசாகிராண்ட் நிர்வாகிகள் தெரிவித்ததாவது:
காசாகிராண்ட் நெக்ஸ்ட் டவுனில், அதிநவீன வசதிகளுடன் வீடுகள் கட்டி, சரியான விலையில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் விதமாக, பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
புதிய இல்லங்களில் குடியேறும் குடும்பங்களுக்கு மனநிறைவையும், மகிழ்ச்சியையும் வழங்கும் வகையில், முதல் ஆறு மாதங்களுக்கு கட்டணமின்றி இலவச பராமரிப்பு சேவை வழங்கப்படுகிறது. சமூக செயல்பாடுகள், கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தவும், காசாகிராண்ட் திட்டமிட்டுள்ளது. விழாக்கால கொண்டாட்டங்களோடு, பொழுதுபோக்கிற்கான ஒன்று கூடல் நிகழ்வுகள் வரை, நன்கு திட்டமிட்டு நடத்தப்படவுள்ள இந்நிகழ்ச்சிகள், காசாகிராண்டு நெக்ஸ்ட் டவுனில் மகிழ்ச்சியையும், உற்சாகத்தையும் கொடுக்கும். புதுமையான அம்சங்கள், கட்டுப்படியாகக்கூடிய விலை, வடிவமைப்பு மற்றும் பல சிறப்பு அம்சங்கள் மீது, காசா கிராண்ட் கவனம் செலுத்தி வருகிறது. குறித்த காலத்திற்குள் வீடுகளை கட்டி, வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கில், மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.

