/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.ஜி.எம். மருத்துவமனை வெள்ளி விழா கொண்டாட்டம்
/
கே.ஜி.எம். மருத்துவமனை வெள்ளி விழா கொண்டாட்டம்
ADDED : ஆக 20, 2024 11:47 PM

கோவை:சின்னியம்பாளையம், கே.ஜி.எம்., மருத்துவமனையின் 25ம் ஆண்டு வெள்ளி விழா கொண்டாட்டம், பிருந்தாவன் கலையரங்கத்தில் நடந்தது.
கே.எம்.சி.எச்., தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி, கே.ஜி.மருத்துவமனை தலைவர் டாக்டர் பக்தவத்சலம், முன்னாள் டி.ஜி.பி., ரவி, ராயல் கேர் மருத்துவமனை தலைவர் டாக்டர் மாதேஸ்வரன், கோவை அரசு மருத்துவக்கல்லுாரி முன்னாள் பேராசிரியர் டாக்டர் சதாசிவம் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
கே.ஜி.எம்., மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் குமரேசன் பேசுகையில், அர்ப்பணிப்பு உணர்வுடன் மக்களுக்கு தரமான சிகிச்சை வழங்குகிறோம். நம்பிக்கையோடு எங்களுடன் பயணிக்கும் அனைவருக்கும் நன்றி,'' என்றார்.
சிறந்த பணியாளர்கள் விழாவில் கவுரவிக்கப்பட்டனர். பல்வேறு கலைநிகழ்வுகளும் நடந்தன. மருத்துவமனை இயக்குனர் தங்கவேல், டாக்டர்கள் தீபக், சரண்யா மற்றும் ஊராட்சி தலைவர் ராஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.