தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கதர், கிராமத் தொழில் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு

 கதர், கிராமத் தொழில் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு

 கதர், கிராமத் தொழில் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்க உத்தரவு


ADDED : மார் 01, 2026 05:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 01, 2026 05:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் உற்பத்தி செய்யப்படும் கதர் மற்றும் கிராமப்பொருட்களின் உற்பத்தி, விநியோகம் மற்றும் விற்பனையை மேம்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம், நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் சம்பத் தலைமையில், கலெக்டர் பவன்குமார் முன்னிலையில் நடந்த கூட்டத்தில், கதர் மற்றும் கிராமப்பொருட்கள் உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை சீராக வழங்குதல், தயாரிப்புகளின் விநியோகம் மற்றும் விற்பனையை அதிகரித்தல், வாரியத்தின் வளர்ச்சிக்குத் துறை சார்ந்த அலுவலர்கள் ஒத்துழைப்பு வழங்குதல் உள்ளிட்டவை வலியுறுத்தப்பட்டன.

மத்திய அரசின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்குவது தொடர்பாக மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் மற்றும் வங்கி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.

காதி மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம் மற்றும் கதர் கிராமத் தொழில் வாரியம் சார்பில் கடன் மற்றும் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us