/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கற்றலின் முதல்படி துவக்கிய குட்டீஸ் 'தினமலர்' வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குஷி
/
கற்றலின் முதல்படி துவக்கிய குட்டீஸ் 'தினமலர்' வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குஷி
கற்றலின் முதல்படி துவக்கிய குட்டீஸ் 'தினமலர்' வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குஷி
கற்றலின் முதல்படி துவக்கிய குட்டீஸ் 'தினமலர்' வித்யாரம்பம் நிகழ்ச்சியில் குஷி
ADDED : அக் 02, 2025 11:48 PM

கோவை:தினமலர்' நாளிதழ் சார்பில் நடந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில், 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, கற்றல் துவக்கி வைக்கப்பட்டது.
குழந்தைகள் கல்வி, கேள்வி, கலைகளில் சிறந்து விளங்க, விஜயதசமி நாளில் வித்யாரம்பம் செய்யப்படுகிறது. அறிவை கற்றுத்தரும் குருவை சிறப்பிப்பதாகவும், இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
'தினமலர்' நாளிதழ் மற்றும் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனம் இணைந்து நடத்தும் 'அ'னா... 'ஆ'வன்னா... அரிச்சுவடி ஆரம்பம் எனும் வித்யாரம்பம் நிகழ்ச்சி, கோவை ராம் நகர் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கத்தில் நேற்று நடந்தது.
கோவை சர்வதேச விமான நிலைய இயக்குனர் (பொறுப்பு) சம்பத்குமார், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் மோகன்தாஸ், ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரியின் இயக்குனர் ராஜாராம், கோவில் குருக்கள் சரவணன், ஹரிஷ் ஆகியோர், குழந்தைகளின் விரல்களை பிடித்து, நெற்மணிகளில், 'அ... ஆ...' எழுதி கற்றலை துவக்கி வைத்தனர். 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, கற்றல் துவக்கி வைக்கப்பட்டது.
குழந்தைகளின் பெற்றோர், தாத்தா அல்லது தாய் மாமா மடியில், குழந்தைகளை அமர வைத்து, ஒரு தட்டில், நெற்மணிகளில், குழந்தையின் சுண்டு விரலை பிடித்து, தாய் மொழியின் எழுத்தை எழுத வைத்தனர். நிகழ்ச்சிக்கு வந்திருந்த குழந்தைகளுக்கு, 'ஸ்கூல் பேக்' வழங்கப்பட்டது.
சிறப்பான ஆரம்பம் எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் மோகன்தாஸ் கூறுகையில், முகமலர்ச்சியோடு, பெற்றோர், தாத்தா, பாட்டியுடன் குழந்தைகள் பங்கேற்றதை காணும் போது மனதுக்கு மிகப்பெரிய சந்தோஷம். இந்த சந்தோஷத்தோடு அவர்களின் கற்றலும் இருக்க வேண்டும்.
''குழந்தைகளின் வாழ்க்கையில் ஒளி ஏற்றக்கூடிய ஆரம்பம் இது. ஒவ்வொரு துறையிலும் குழந்தைகள் சிறந்து விளங்க வேண்டும்,'' என்றார்.
புதுப்புது மாற்றம் ஸ்ரீ ஈஸ்வர் பொறியியல் கல்லுாரி இயக்குனர் ராஜாராம் கூறுகையில், ''குழந்தைகள் ஆர்வமாகவும், மகிழ்ச்சியாகவும், தங்கள் கற்றலை துவக்கியிருக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையில் எல்லாம் நல்லதாகவே நடக்கும். கற்றல் இன்று புதுப்புது மாற்றங்களை கண்டு வருகிறது. அதற்கேற்ப, தங்கள் குழந்தைகளை பெற்றோர் தயார்படுத்த வேண்டும்,'' என்றார்.
குருக்கள் சரவணன் கூறுகையில், வித்யாரம்பம் நிகழ்ச்சியில், குழந்தைகளின் கற்றலுக்கான முதல்படி துவங்கியது. தங்களுக்கு ஏதோ சொல்லித் தருகிறார்கள் என குழந்தைகள் உணர்ந்தது, கண்கூடாக தெரிந்தது. இது, அவர்களை மென்மேலும் உயர்த்தும்,'' என்றார்.
கற்றலே முழுமையாக்கும் 'தினமலர்' அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளின் ஆர்வம் மெய்சிலிர்க்க வைத்தது. இந்த அருமையான நாளில், அவர்களின் கற்றல் துவங்கியிருக்கிறது. கற்றல் மட்டுமே, ஒரு மனிதனை முழுமையாக்கும். குழந்தைகளுக்கு அரிய பல விஷயங்களை கற்றுத்தருவதில் ஆசிரியர்களுக்கு நிகராக பெற்றோருக்கும் பங்கு உள்ளது. - சம்பத்குமார், இயக்குனர் (பொறுப்பு), சர்வதேச விமான நிலையம்.