/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் 1039 பேருக்கு சிறுநீரக நோய் கண்டுபிடிப்பு
/
கோவையில் 1039 பேருக்கு சிறுநீரக நோய் கண்டுபிடிப்பு
கோவையில் 1039 பேருக்கு சிறுநீரக நோய் கண்டுபிடிப்பு
கோவையில் 1039 பேருக்கு சிறுநீரக நோய் கண்டுபிடிப்பு
ADDED : நவ 06, 2024 11:42 PM
கோவை; சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டத்தில் கோவையில், 1039 பேருக்கு சிறுநீரக நோய் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், 2023ம் ஆண்டு ஜூலை மாதம் சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டம் -துவங்கப்பட்டது. இதையடுத்து கோவையில், 89 ஆரம்ப சுகாதார நிலையங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதில் சிறுநீரக பிரச்னை அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு சிறுநீரகம் பரிசோதனை செய்ய டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். அதன்படி சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டத்தில் பரிசோதனை மேற்கொண்டதில், 1039 பேருக்கு ஆரம்ப நிலை சிறுநீரக நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிறுநீரகம் காக்கும் திட்ட அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் கடந்த ஜூலை 2023ம் ஆண்டு முதல் ஜூலை 2024ம் ஆண்டு வரை, 57,476 ஆண்கள் மற்றும் 59,574 பெண்கள் உட்பட 1,17,050 பேருக்கு சிறுநீரக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதில், 530 ஆண்கள் மற்றும் 509 பெண்கள் உட்பட 1,039 பேருக்கு ஆரம்ப நிலை சிறுநீரக பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் அந்தந்த ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களால் கண்காணிக்கப்படுகிறார்கள்.
தொற்று அல்லாத நோய்களைக் கொண்டவர்களில் குறைந்தது, 60 முதல் 70 சதவீதம் பேருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சிறுநீரக பாதிப்பு ஏற்படுபவர்களில் ஆண்கள், பெண்கள் சமமாக இருந்து வருகின்றனர். தேவையாள அளவு தண்ணீரை எடுத்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.