/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஜி.வி., பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா
/
பி.ஜி.வி., பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா
ADDED : மார் 21, 2025 10:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே வரப்பாளையத்தில் உள்ள பி.ஜி.வி., பள்ளியில் மழலையர் பட்டமளிப்பு விழா நடந்தது.
தாளாளர் முத்துலட்சுமி தலைமை வகித்தார். ஆசிரியர் சுதா அனைவரையும் வரவேற்றார். சம்யுக்தா ஆண்டறிக்கை வாசித்தார்.
குழந்தைகளின் பட்டிமன்றம், சிரிப்போம் சிந்திப்போம், நடனம் மற்றும் நாடகம் அனைவரையும் கவர்ந்தது.
யு.கே.ஜி., குழந்தைகள் அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் விளையாட்டு பொருட்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் சர்மிளா தேவி, விஷ்ணுபிரியா செய்து இருந்தனர். அமுதா நன்றி கூறினார்.