/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.ஐ.டி., கல்லுாரி பட்டமளிப்பு விழா
/
கே.ஐ.டி., கல்லுாரி பட்டமளிப்பு விழா
ADDED : ஜன 22, 2024 12:20 AM

கோவை;கண்ணம்பாளையம், கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரியின், 11வது பட்டமளிப்பு விழா கல்லுாரி வளாக கலையரங்கில் நடந்தது.
பெங்களூரு, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் எஸ்.பி.எம்.டி., இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாகி கோட்ரேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அவர் பேசுகையில், 'அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சியில் மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும். சவால்களை எதிர்கொள்ள தேவையான திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்' என்றார். தொடர்ந்து, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார்.
இவ்விழாவில், எம் இ., எம்.பி.ஏ., எம்.சி.ஏ. பி.இ., மற்றும் பி.டெக்., மாணவர்களுக்கு மொத்தம், 562 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.
கல்லுாரி நிறுவனத்தலைவர் பொங்கலுார் பழனிச்சாமி, துணைத் தலைவர் இந்து முருகேசன், தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, கல்லுாரி முதல்வர் ரமேஷ் மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.