/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
திறன்மிக்க இளைஞர்களை உருவாக்கும் கே.ஐ.டி., கல்லுாரி
/
திறன்மிக்க இளைஞர்களை உருவாக்கும் கே.ஐ.டி., கல்லுாரி
திறன்மிக்க இளைஞர்களை உருவாக்கும் கே.ஐ.டி., கல்லுாரி
திறன்மிக்க இளைஞர்களை உருவாக்கும் கே.ஐ.டி., கல்லுாரி
ADDED : அக் 11, 2024 12:27 AM
கோவை : விஜயலட்சுமி பழனிச்சாமி அறக்கட்டளை சார்பில், கலைஞர்கருணாநிதி தொழில்நுட்பக் கல்லுாரி (கே.ஐ.டி.,) நிர்வாகி பழனிச்சாமியால் கோவை கண்ணம்பாளையத்தில் 2008ம் ஆண்டு துவங்கப்பட்டது.
கடந்த, 17 ஆண்டுகளில் பல சாதனைகளை கடந்து வந்த இக்கல்லுாரி தன்னாட்சி அங்கீகாரம், நாக்., தர ஆய்வில் 'ஏ' கிரேடு , என்.பி.ஏ., தரச்சான்றும் பெற்று செயல்பட்டு வருகிறது. அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டில் செயல்படும் இக்கல்லுாரி, மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்கிவருகிறது.
சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் நடைமுறையில் உள்ள உயர் பாடத்திட்டங்களை நன்கு கற்றறிந்த ஆசிரியர்கள், சிறந்த உட்கட்டமைப்பு கொண்ட ஆராய்ச்சி மேம்பாட்டு வசதிகளை மாணவர்களுக்கு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
இக்கல்லுாரியில் மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் தொழில்நுட்பம் சார்ந்த, 12 இளநிலைப் பட்டப்படிப்புகளும், 7 முதுநிலைப் பட்டப்படிப்புகளும் மற்றும் 7 ஆராய்ச்சி மேற்படிப்புகளும் அளிக்கப்படுகின்றன.
மேலும் 200க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ள கல்லுாரி என்பது குறிப்பிடத்தக்கது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், கே.ஐ.டி., மாணவர்கள் தொழில்துறையில் நேரடியாக பயிற்சி பெற்று அதற்கேற்ற திறன்களுடன் பட்டங்களை பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனால், வேலைவாய்ப்பு என்பது எளிதாக்கப்பட்டுள்ளது. மேலும், வேலைவாய்ப்புகளை தாண்டி தொழில்முனைவோர் திறன் தொடர்ந்து ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. மேலும் கல்லுாரி சார்ந்த விபரங்களை அறிய, 9965590056, 9965590076, 9965590035 என்ற எண்ணிலும், www.kitcbe.com என்ற இணையதளத்திலும் தொடர்பு கொள்ளலாம்.