/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உறுப்பு தானம் செய்தோரை கவுரவித்த கே.எம்.சி.எச்.
/
உறுப்பு தானம் செய்தோரை கவுரவித்த கே.எம்.சி.எச்.
ADDED : ஆக 25, 2025 10:01 PM
கோவை; சர்வதேச உடல் உறுப்புதான வாரத்தை முன்னிட்டு, கே.எம்.சி.எச். மற்றும் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையம் சார்பில், 'வாழ்க்கைக்குப் பிறகும் வாழ்க்கை 2025' என்ற பெயரில், உறுப்பு தானம் செய்தோருக்கு, பாராட்டு விழா நடந்தது.
உறுப்பு தானம் செய்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் தன்னலமற்ற பங்களிப்புக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
கே.எம்.சி.எச். தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி, செயல் இயக்குனர் டாக்டர் அருண் ஆகியோர், நன்கொடையாளர்களின் பங்களிப்பு, நுாற்றுக்கணக்கான நோயாளிகள் மற்றும் குடும்பங்களுக்குப் புதிய வாழ்க்கையை அளித்துள்ளதாக பேசினர்.
தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் டாக்டர் கோபாலகிருஷ்ணன், கோவை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ கண்காணிப்பாளர் கண்ணதாசன், இ.எஸ்.ஐ. மருத்துவமனை தடயவியல் துறை தலைவர் மனோகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
நன்கொடையாளர்களின் நினைவாக மரக்கன்று நடப்பட்டது. கே.எம்.சி.எச். மருத்துவ இயக்குனர் டாக்டர் முருகன், மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வர் ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.