/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.எம்.சி.எச். சார்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
/
கே.எம்.சி.எச். சார்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
கே.எம்.சி.எச். சார்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
கே.எம்.சி.எச். சார்பில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு
ADDED : நவ 11, 2025 12:56 AM

கோவை: கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின் சார்பில் வீரியம்பாளையத்தில், ரூ.2.18 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய மாநகராட்சி நடுநிலைப்பள்ளி கட்டட, திறப்பு விழா நேற்று நடந்தது.
மருத்துவமனையின் தலைவர் நல்லா பழனிசாமி, பள்ளி மாணவ மாணவியர் முன்னேற்றத்திற்காக இப்பள்ளி கட்டடத்தை கட்டி அர்ப்பணித்துள்ளார். பள்ளியில் ரூ.2.11 கோடி செலவில் ஏழு வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.
துவக்க விழாவில் கே.எம்.சி.எச். தலைவர் நல்லா பழனிசாமி பேசுகையில், கல்வி, சமூக முன்னேற்ற பணிகளில் கோவை மெடிக்கல் சென்டர், தொடர்ந்து அக்கறையுடன் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் வடமதுரை அருகே கலிக்க நாயக்கன்பாளையம் ஊராட்சியில், 75 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பள்ளி கட்டடம், நல்லாம்பட்டியில் 2.11 கோடி ரூபாயில் புதிய பள்ளி கட்டடம், உலக தர கிரிக்கெட் மைதானத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி உதவியும் வழங்கப்பட்டுள்ளது, என்றார்.
புதிய கட்டடத்தை எம்.பி.,ராஜ்குமார் திறந்து வைத்தார். மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, கமிஷனர் சிவகுரு பிரபாகரன், துணை மேயர் வெற்றிச்செல்வன், கே.எம்.சி.எச்.,இயக்குனர் டாக்டர் அருண் பங்கேற்றனர்.

