/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூரில் நொய்யல் நுால் வெளியீடு
/
பேரூரில் நொய்யல் நுால் வெளியீடு
ADDED : நவ 11, 2025 12:55 AM
தொண்டாமுத்தூர்: தமிழ் அறிவு வளாகம் சார்பில், 'ஒரு நூலகத்தின் பயணம்' என்ற தலைப்பில், சென்னையில் உள்ள ரோஜா முத்தையா நூலகத்தின் வளர்ச்சி பணிக்கான ஆலோசனை கூட்டம், பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் தமிழ் கல்லூரியில் நடந்தது.
பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித்தனர். சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், விஜயா பதிப்பக பதிப்பாளர் வேலாயுதம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குனர் சுந்தர் கணேசன், நடிகர் சிவகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்புரையாற்றனர். தொடர்ந்து, 'நொய்யல்' என்ற நூலை, பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் மற்றும் சிரவை ஆதினம் குமரகுருபர சுவாமிகள் ஆகியோர் வெளியிட்டனர்.

