/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.எம்.சி.எச்.,ல் 'ஆம்பிகான்' மாநாடு
/
கே.எம்.சி.எச்.,ல் 'ஆம்பிகான்' மாநாடு
ADDED : மார் 17, 2025 12:38 AM

கோவை; மருத்துவ இயற்பியலாளர்கள் பங்கேற்ற, 'ஆம்பிகான்' மாநாடு, கே.எம்.சி.எச்.,ல் நடந்தது.
கே.எம்.சி.எச்., தலைவர் டாக்டர் நல்லா பழனிசாமி பேசுகையில், ''மருத்துவ இயற்பியலாளர்கள் மருத்துவத்தில் இயற்பியல் கோட்பாட்டை பயன்படுத்தி கதிர்வீச்சு சிகிச்சை, கதிர்வீச்சு பாதுகாப்பு மற்றும் இமேஜிங் போன்ற துறைகளில் செயல்படும் மருத்துவ நிபுணர்கள்,'' என்றார்.
மாநாட்டில், புதுச்சேரி பிரிவு மற்றும் தென் மாநிலங்களில் இருந்து, 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கதிர்வீச்சு சிகிச்சை, இமேஜிங் தொழில்நுட்பங்கள், கதிர்வீச்சு பாதுகாப்பு மற்றும் புற்றுநோய் சிகிச்சையில் தர உறுதிப்பாடு, துறை சார்ந்த வளர்ச்சி, மருத்துவ இயற்பியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த கலந்துரையாடல் மற்றும் கருத்தரங்கு நடந்தது.
கே.எம்.சி.எச்., துணைத் தலைவர் தவமணி, செயல் இயக்குனர் டாக்டர் அருண் பழனிசாமி, டாக்டர் சுப்ரமணியம், இந்திய மருத்துவ இயற்பியலாளர்கள் சங்க செயலாளர் டாக்டர் பரணிதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.