sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கே.எம்.சி.எச்.,ல் சலுகை கட்டணத்தில் டிஜிட்டல் மேமோகிராம் பரிசோதனை

/

கே.எம்.சி.எச்.,ல் சலுகை கட்டணத்தில் டிஜிட்டல் மேமோகிராம் பரிசோதனை

கே.எம்.சி.எச்.,ல் சலுகை கட்டணத்தில் டிஜிட்டல் மேமோகிராம் பரிசோதனை

கே.எம்.சி.எச்.,ல் சலுகை கட்டணத்தில் டிஜிட்டல் மேமோகிராம் பரிசோதனை


ADDED : அக் 23, 2025 11:36 PM

Google News

ADDED : அக் 23, 2025 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோ வை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையில், வரும் 31ம் தேதி வரை நடக்கும் பெண்களுக்கான மார்பக பரிசோதனை முகாமில், சலுகை கட்டணத்தில் டிஜிட்டல் மேமோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

கே.எம்.சி.ஹெச்.மார்பக புற்றுநோய் கதிரியக்க சிகிச்சை நிபுணர் டாக்டர் ரூபா கூறியதாவது:

அனைத்து புற்றுநோய்களையும் எந்த அறிகுறியும் இல்லாமல், துவக்க நிலையில் கண்டுபிடிக்க முடியாது. ஆனால் அறிகுறி இல்லாமலிருந்தாலும் கூட, மார்பக புற்றுநோயை பரிசோதனை வாயிலாக கண்டறியலாம். மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் கண்டறிவதன் வாயிலாக பாதிக்கப்பட்ட பெண்ணின் உயிரை காப்பாற்ற முடியும்.

பெண்களுக்கு எந்த வயதாக இருந்தாலும் மார்பகத்தில் கட்டி(வலியுடன் அல்லது வலியில்லாமலும்), மார்பகக் காம்புகளில் கசிவு,மார்பகக் காம்பு பின் நோக்கி செல்லுதல், அக்குள்களில் வீக்கம், மார்பு, மார்பகங்களில் வலி உள்ளிட்ட அறிகுறிகளில் எதாவதொன்று இருந்தாலோ, ரத்தம் சம்பந்தமான நெருங்கிய சொந்தத்தில் யாருக்காவது மார்பக புற்றுநோய் இருத்தாலோ உடனடியாக மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.

அறிகுறிகள் இல்லாவிட்டாலும், 40 வயதிற்கு மேற்பட்ட ஆரோக்கியமான பெண்களும் இப்பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும். மேலும் பெண்கள் தங்களது சுய பரிசோதனை வாயிலாக கண்டுபிடிக்க முடியாத ஆரம்ப நிலை கட்டிகளை கூட மேமோகிராம் பரிசோதனையில் கண்டுபிடித்துவிடலாம். இது ஒரு எக்ஸ்ரே முறையை போன்ற பரிசோதனை. இதில் மார்பகத்தில் கட்டி உருவாவதற்கு முன்பான ஏற்படும் சிறிய மாற்றத்தைக்கூட முன்கூட்டியே கண்டறிய முடியும். கண்டுபிடிக்கப்படும் 90 சதவீத கட்டிகள் புற்றுநோய் இல்லாத கட்டிகளாகவே இருக்கும். 10 சதவீத கட்டிகள் மட்டுமே புற்றுநோயாக இருக்கும். இவற்றை முன்கூட்டியே கண்டுபிடிக்கும்போது முழுமையாக குணப்படுத்திவிட வாய்ப்புள்ளது. மார்பகத்தை அகற்றாமலே கட்டிகளை மட்டும் அகற்றும் நவீன சிகிச்சை முறை கே.எம்.சி. எச்.ல் உள்ளது.

பெண்களுக்கான மார்பக பரிசோதனை முகாம் மருத்துவமனையில் கடந்த 3ம் தேதி துவங்கியது. வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. இதில் ரூ.3,400 கட்டணமுள்ள டிஜிட்டல் மேமோகிராம் ரூ.1,200க்கும், ரூ.1,100 கட்டணமுள்ள ஹைடெக் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் ரூ.600க்கும் சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளப்படுகிறது. தொடர்புக்கு, 87548 87568, 0422 432 4151. இவ்வாறு, அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us