/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளி அருகே மண்டிக்கிடக்கும் செடிகள்; மாணவர்கள் பாதிப்பு
/
அரசு பள்ளி அருகே மண்டிக்கிடக்கும் செடிகள்; மாணவர்கள் பாதிப்பு
அரசு பள்ளி அருகே மண்டிக்கிடக்கும் செடிகள்; மாணவர்கள் பாதிப்பு
அரசு பள்ளி அருகே மண்டிக்கிடக்கும் செடிகள்; மாணவர்கள் பாதிப்பு
ADDED : மார் 17, 2024 11:49 PM

வீணாகும் தண்ணீர்
பொள்ளாச்சி சி.டி.சி., மேட்டில் இருந்து, வடுகபாளையம் செல்லும் ரோட்டின் ஓரத்தில் உள்ள தண்ணீர் குழாயில் கசிவு ஏற்பட்டு அதிகமாக விரையம் ஆகி ரோட்டில் வழிந்தோடுகிறது. இதனால் ரோட்டில் செல்லும் பயணியர்களுக்கு, சிரமம் ஏற்படுவதுடன் கோடை காலத்தில் தண்ணீர் வீணாகிறது. இதை அதிகாரிகள் கவனித்து சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - பிரெடி, பொள்ளாச்சி.
புதரால் பாதிப்பு
கிணத்துக்கடவு, அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தின் அருகே சுவற்றின் ஓரத்தில் அதிகமாக செடிகள் வளர்ந்து புதர் போல் காட்சியளிக்கிறது. இதனால் அங்கு சிறிய அளவிலான பூச்சிகள் மற்றும் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. எனவே, மாணவர்கள் நலன் கருதி இந்த பள்ளி சுவற்றின் ஓரத்தில் உள்ள புதரை பள்ளி நிர்வாகமோ அல்லது பேரூராட்சி நிர்வாகமோ சுத்தம் செய்ய வேண்டும்.
- - ராஜ்குமார், கிணத்துக்கடவு.
ரோட்டில் குடிநீர்
பொள்ளாச்சி, வஞ்சியாபுரம் பிரிவில் ரோட்டின் ஓரத்தில் குடிநீர் குழாய் உடைந்து அதிகமாக தண்ணீர் வழிந்தோடுகிறது. இதில், குப்பையும் கலந்து ரோட்டின் ஓரத்தில் இருப்பதால், கடும் துர்நாற்றம் வீசுவதுடன் பொது சுகாதாரம் பாதிப்படைந்துள்ளது. எனவே, இதை மக்கள் நலன் கருதி உரிய அதிகாரிகள் கவனித்து விரைவில் சரி செய்ய வேண்டும்.
- - மவுலி, பொள்ளாச்சி.
வடிகாலை சுத்தப்படுத்தணும்
உடுமலை, பழநி ரோட்டில் தங்கம்மாள் ஓடையில் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது. ஆனால், பணிகள் முழுமையாக முடியாததால், வடிகாலில் கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மூர்த்தி, உடுமலை.
சென்டர் மீடியனில் குப்பை
கிணத்துக்கடவு மேம்பாலத்தின் கீழ் உள்ள, சர்வீஸ் ரோட்டில் சென்டர் மீடியன் பகுதியில் அதிக அளவு குப்பை கொட்டப்பட்டும், செடிகள் அதிகமாக வளர்ந்தும் அசுத்தமாக காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் இந்த சென்டர் மீடியன் பகுதியை முறையாக பராமரிப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- - கவின், கிணத்துக்கடவு.
போக்குவரத்துக்கு இடையூறு
கிணத்துக்கடவு, பழைய பஸ் ஸ்டாப் பகுதியில் வாகனங்கள் திரும்பும் இடத்தில் போதிய அளவு இடம் இல்லாததால், பெரிய வாகனங்கள் திரும்பி செல்ல சிரமம் ஏற்படுகிறது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, வாகன ஓட்டுனர்கள் நலன் கருதி இந்த ரோட்டை விரிவு படுத்த வேண்டும்.
- - சஞ்சு, கிணத்துக்கடவு.
பாலப்பணிகளை முடிக்கணும்
உடுமலை ஸ்ரீ நகர், பழநி ரோடு சந்திப்பில் தரைமட்டப்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால், பணிகள் முழுமையாக முடிவடையாமல் உள்ளது. இதனால் வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பாலப்பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ராஜா, உடுமலை.
போக்குவரத்து நெரிசல்
உடுமலை, சரவணா வீதியில் வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், மற்ற வாகனங்கள் செல்வதற்கு இடையூறாக உள்ளது. பொதுமக்கள் நடப்பதற்கும் வழியில்லாமல் இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கவிதா, உடுமலை.
விதிமீறும் வாகனங்கள்
உடுமலை, பஸ் ஸ்டாண்ட் பகுதி பொள்ளாச்சி ரோட்டில் மாலை நேரங்களில் வாகனங்கள் விதிமுறை மீறி பார்க் செய்யப்படுகின்றன. பஸ் செல்வதற்கும் வழியில்லாமல் ரோடு ஆக்கிரமிக்கப்படுகிறது. ஒரு வழி பாதையிலும் போக்குவரத்து பாதிக்கப்படுவதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
- ராம்குமார், உடுமலை.
தெருவிளக்குகள் எரிவதில்லை
உடுமலை, அனுசம் நகரில் தெருவிளக்குகள் சரியாக எரியாமல் உள்ளது. மாலை நேரங்களில் இருள் சூழ்ந்திருப்பதால், தெருநாய்கள் அடிக்கடி அவ்வழியாக செல்பவர்களை துரத்திச்சென்று அச்சுறுத்துகிறது. மேலும், பெண்கள் அவ்வழியாக மாலை நேரங்களில் தனியாக செல்வதற்கு பாதுகாப்பில்லாமலும் உள்ளது.
- அருண், உடுமலை.
நிழற்கூரை இல்லை
உடுமலை திருப்பூர் ரோடு, இந்திராநகர் பகுதியில் நிழற்கூரை அமைக்கபபடவில்லை. இதனால், அந்த பகுதி பஸ் நிறுத்தத்தில் பஸ் ஏறும் பயணியர், பொதுமக்கள் ரோட்டோரம் வெயலில் நிற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே, அங்கு நிழற்கூரை அமைக்க ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வராஜ், இந்திராநகர்.
கழிவுகள் தேக்கம்
உடுமலை, காந்திநகர் பகுதியில் குப்பைக்கழிவுகள், வீடுகளின் முன்பு இருக்கும் சாக்கடை கால்வாய்களில் குவிக்கப்படுகிறது. இதனால் கழிவுநீர் செல்வதற்கு வழியில்லாமல் பல இடங்களில் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் கால்வாயில் குப்பைக்கழிவுகள் தேங்கியிருப்பதால் அவற்றிலிருந்து விஷ ஜந்துகளும் அதிகமாக வெளிவருகின்றன.
- ராமசந்திரன், உடுமலை.

