/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாட்டு சத்தத்தை குறைக்க சொன்னவருக்கு கத்திக்குத்து
/
பாட்டு சத்தத்தை குறைக்க சொன்னவருக்கு கத்திக்குத்து
பாட்டு சத்தத்தை குறைக்க சொன்னவருக்கு கத்திக்குத்து
பாட்டு சத்தத்தை குறைக்க சொன்னவருக்கு கத்திக்குத்து
ADDED : டிச 09, 2024 05:02 AM
கோவை : பாட்டு சத்தத்தை குறைக்க சொன்னவருக்கு, கத்திக்குத்து விழுந்தது.
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் ஷபீருதீன்,27; கூலித்தொழிலாளி. இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக, கோவை தொண்டாமுத்தூர் தென்னமநல்லூர், தென்றல் நகரில் வாடகை வீட்டில் வசித்து வேலைக்கு சென்று வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, ஷபீருதீன் வழக்கம்போல வேலை முடித்துவிட்டு, வீட்டிற்கு வந்துள்ளார்.
அப்போது, பக்கத்து வீட்டில் வசித்து வரும், அசாம் மாநிலத்தை சேர்ந்த ரஷிதுல் ஹூக்,29 மற்றும் அவரது சகோதரர் ஹண்ணன் இஸ்லாம்,23 ஆகிய இருவரும் மது அருந்திவிட்டு, ஸ்பீக்கரில் அதிக சத்தம் வைத்து, பாட்டு கேட்டு கொண்டிருந்துள்ளனர்.
அப்போது, ஷபீருதீன், ரஷிதுல்லிடம் பாட்டு சத்தத்தை குறைக்க கூறியுள்ளார். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ரஷிதுல் ஹூக் மற்றும் ஹண்ணன் இஸ்லாம் ஆகியோர் இணைந்து, பீர் பாட்டிலால், ஷபீருதீனை தலையில் தாக்கியுள்ளனர்.
ரஷிதுல் ஹூக், அருகில் இருந்த கத்தியை எடுத்து, ஷபீருதீனின் அடி வயிற்றில் இருமுறை குத்தியுள்ளார்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷபீருதீனை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொண்டாமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, ரஷிதுல் ஹூக் மற்றும் ஹண்ணன் இஸ்லாம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.