தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொகுதி அறிவோம் கோவை வடக்கு தொகுதி

 தொகுதி அறிவோம் கோவை வடக்கு தொகுதி

 தொகுதி அறிவோம் கோவை வடக்கு தொகுதி


ADDED : மார் 22, 2026 08:19 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 22, 2026 08:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை வடக்கு தொகுதி மருதமலை, கல்வீரம்பாளையம், வடவள்ளி, வீரகேரளம், பி.என்.புதுார், சீரநாயக்கன்பாளையம், பூசாரிபாளையம், லாலி ரோடு, வெங்கிட்டாபுரம், வேலாண்டிபாளையம், சாய்பாபாகாலனி, கே.கே.நகர், ரத்தினபுரி, கண்ணப்பநகர், சங்கனுார், நல்லாம்பாளையம், மணியகாரம்பாளையம், கணபதி, போலீஸ் குவார்ட்டர்ஸ், கணபதி மாநகர் உள்ளிட்ட, மாநகராட்சிக்குட்பட்ட 21 வார்டுகளை உள்ளடக்கியது.

சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகள் மற்றும் மிகப்பெரிய தொழிற்சாலைகள் இத்தொகுதியில் அமைந்துள்ளன.

2021 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் அம்மன் அர்ஜூனன், 81 ஆயிரத்து,454 ஓட்டுக்களை பெற்று வெற்றி பெற்றார். 40.16 சதவீதம்.

இவருக்கு அடுத்து தி.மு.க.,வேட்பாளர் சண்முகசுந்தரம், 77 ஆயிரத்து, 453 ஓட்டுக்களை பெற்றார். 38.19 சதவீதம். இருவருக்குமிடையே 4,001 ஓட்டுக்கள் வித்தியாசம் இருந்தன.

கடந்த தேர்தலின் போது, 3,50,000 வாக்காளர்கள் இருந்தனர். வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்தத்துக்கு பின்பு, 58,467 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டனர்.

புகழ்பெற்ற மருதமலை சுப்ரமணிய சுவாமி கோயில் மற்றும் சாய்பாபாகோயில் அமைந்துள்ளது. சட்டக்கல்லுாரி, பாரதியார், அண்ணா, வேளாண் பல்கலைகள், அவினாசிலிங்கம் நிகர்நிலை பல்கலை உள்ளன. அரசு தொழில்நுட்ப கல்லுாரியும் அமைந்துள்ளது.

இந்த வார்டில் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் என்றில்லாமல் அனைத்து சமூகத்தை சேர்ந்த மக்களும் வசிக்கின்றனர்.

2011, 2016, 2021 ஆகிய மூன்று சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க.,வே தொடர்ந்து வெற்றி பெற்றது. ஒவ்வொரு தேர்தலிலும் தி.மு.க., இரண்டாம் இடத்தை பிடித்து தோல்வியை தழுவி வருகிறது.

இம்முறை அ.தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், தி.மு.க.,கூட்டணி கட்சியினர், த.வெ.க., நாம் தமிழர் கட்சி என்று நான்கு அணிகளாக போட்டியிடுகின்றனர்.

வார்டு பயோ-டேட்டா மொத்த வாக்காளர்கள், 2,91,533 பேர் ஆண் 1,43,383 பெண் 1,48,122 மூன்றாம் பாலினத்தவர் 28 பேர்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us