/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து வைர நகை தயாரிப்பு!
/
வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து வைர நகை தயாரிப்பு!
வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து வைர நகை தயாரிப்பு!
வாடிக்கையாளர்களின் தேவை அறிந்து வைர நகை தயாரிப்பு!
ADDED : அக் 28, 2024 11:59 PM
கோவை : தேர்ந்த வடிவமைப்பாளர்களைக் கொண்டு, 'ஜாய்லைர் பிரைவ் டைமண்ட் ஜுவல்லரி' நிறுவனத்தார், வைர நகைகளை வழங்குகின்றனர்.
நிறுவனத்தின், 10வது ஆண்டு விழாவை முன்னிட்டு 'உங்கள் நம்பிக்கை, எங்கள் வெற்றி' என, வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ப, நகைகளை தயார் செய்து தருகின்றனர்.
இதன்படி, நிறுவனத்தினர் தங்கள் சேவையை, 'டைரக்ட் டு ஹோம்' மற்றும் 'டைரக்ட் டு கஸ்டமர்' என்ற முறையில் வழங்குகின்றனர். வாடிக்கையாளர்களிடம் கேட்டு, அவர்களின் தேவை, பட்ஜெட், விரும்பும் டிசைன் அறிந்து, வடிவமைத்து தருகின்றனர்.
குறிப்பாக மணப்பெண், மணமகன் திருமண வைபவ நிகழ்ச்சிகளுக்கான, பிரத்யேக திருமண வைர நகைகளையும் செய்து தருகின்றனர். வாடிக்கையாளர்கள், நிறுவனத்தின் வைர கட்டிங் மற்றும் பாலிஷிங் தொழிற்சாலைக்கு, நேரில் சென்று பார்வையிடலாம். அங்கு, வைர நகைகளின் உறுதி தன்மையை அறிந்து கொள்ளலாம்.
இந்நிறுவனம் துபாய், மும்பை, பெல்ஜியம் ஆகிய உலகலாவிய சர்வதேச நிறுவனமாகும். கோவையில் அவிநாசி ரோட்டில் உள்ள வெற்றி டவர்ஸ், இரண்டாம் தளத்தில் கடை செயல்படுகிறது. விபரங்களுக்கு, 97913 49763, 87540 34511 ஆகிய எண்களில், தொடர்பு கொள்ளலாம்.