/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'அறிவு, வாழ்க்கை முழுக்க உடன் வரும்'
/
'அறிவு, வாழ்க்கை முழுக்க உடன் வரும்'
ADDED : ஜன 25, 2025 12:28 AM
'பட்டம்' மாணவர் பதிப்பு பொறுப்பாசிரியர் பேசியதாவது:
'பட்டம்' இதழை மிகக் கவனமாக வடிவமைக்கிறோம். மாணவர்களின் கல்வி, மேம்பாடு, எதிர்காலம் ஆகியவற்றைக் கவனத்தில் கொண்டு, வாரத்துக்கு 60 பக்கங்களில், 32 துறைகள் சார்ந்து தகவல்கள் இடம்பெறுகின்றன.
மாணவர்கள் பட்டத்தில் கற்றுக் கொள்ளும் அறிவு, வாழ்க்கை முழுதும் உடன் வரும். இந்தப் போட்டி, நீங்கள் புத்திசாலியா, உங்களை விட மற்றொருவர் புத்திசாலியா என்பதை எடைபோடுவதற்கோ, மதிப்பிடுவதற்கோ அல்ல. போட்டியில் வெற்றி பெறுவதுதான் இலக்கு என்றாலும், தவறியவர்கள் கவலைப்படத் தேவையில்லை.
நாம் கற்றுக் கொண்ட விஷயங்களை, எப்படி பயன்படுத்துகிறோம் என்பது முக்கியம். உங்களின் அறிவுத் தளத்தில் இருந்து, எந்த அளவுக்கு அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கிறீர்கள் என்பது முக்கியம்.
பட்டம் இதழை நாங்கள் வடிவமைத்து, விநியோகித்தாலும், ஆசிரியர்களின் பங்களிப்பு மிக முக்கியமானது. மாணவர்கள் பட்டம் இதழை ஆழமாக, நுணுகிப் படித்திருப்பதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. மாணவர்களின் நலனில், அவர்களின் கூடுதல் அறிவில் அக்கறை கொண்ட ஆசிரியர்கள் இல்லாமல் இதை நாம் சாதித்திருக்க முடியாது.
இவ்வாறு, அவர் பேசினார்.

