ADDED : ஆக 28, 2026 01:10 PM
கோவை: கோயம்புத்துார் தொழில் உள்கட்டமைப்பு சங்கத்தின்(கோஇண்டியா) 22வது ஆண்டு பொதுக்குழு கூட்டம், ரேஸ்கோர்ஸ் சீமா அரங்கில் நடந்தது. இதில், 2026–27ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவராக ராமசாமி, துணை தலைவர்களாக மிதுன் ராம்தாஸ், கார்த்திகேயன் தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவராக பொறுப்பேற்ற ராமசாமி பேசுகையில்,‘‘கோஇண்டியா’ அமைப்பில் திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்கத்துக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. தொழில் சார்ந்த பயிற்சி திட்டங்களுடன் பயிற்சி மையத்தையும் வலுப்படுத்த திட்டமிட்டுள்ளோம்,’’ என்றார்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின்(எம்.எஸ்.எம்.இ.,) திறனை மேம்படுத்தவும், தொழில்நுட்ப உதவிகள் வழங்கவும் கோஇண்டியா உறுதுணையாக இருப்பதுடன், அவற்றின் பிரச்னைகள், கோரிக்கைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண நடவடிக்கை எடுக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
