/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வடக்கு சர்வோதயா சங்கத்தில் கொலு பொம்மை கண்காட்சி
/
வடக்கு சர்வோதயா சங்கத்தில் கொலு பொம்மை கண்காட்சி
ADDED : செப் 05, 2025 10:37 PM

கோவை; கோவை, என்.ஹெச்., ரோட்டில் உள்ள வடக்கு சர்வோதய சங்கத்தின் கதர்பவனில் பொம்மை கொலு கண்காட்சி மற்றும் விற்பனை துவக்க விழா நடந்தது; மேயர் ரங்கநாயகி துவக்கி வைத்தார்.
வடக்கு சர்வோதய சங்கம் கதர்பவன் மேலாளர் முத்துக்குமார் கூறியதாவது:
இந்தாண்டு புதுமையான பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன. நவராத்தி கொலு வைக்க தேவையான அனைத்து வகையான பொம்மைகளும் உள்ளன. செட்டாகவும், தனியாகவும் 40 வகையான பொம்மைகள் உள்ளன.
விநாயகர், மூகாம்பிகை, தன்வந்திரி பெருமாள், வராகி, பஞ்சமுக ஆஞ்சநேயர், பூவராக பெருமாள், நம்மாழ்வார், ராமானுஜர், மணவாள மாமுனிகள், விஸ்வரூபம் லட்சுமி, சரஸ்வதி என தனி பொம்மைகள், ராமர் செட், அஷ்டலட்சுமி செட், கிரிக்கெட் செட், கச்சேரி செட், பூம்பூம் மாடு செட், முயல் ஆமை செட், தசாவதார செட், சங்கீத மும்மூர்த்திகள் செட் என, செட் பெம்மைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கண்காட்சியில் வாங்குவோருக்கு 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. நவராத்திரி முடியும் வரை கண்காட்சி இருக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.