/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காங்., சொத்து மீட்புக்குழு பயணம் திடீர் ரத்து
/
காங்., சொத்து மீட்புக்குழு பயணம் திடீர் ரத்து
ADDED : ஆக 22, 2025 11:42 PM
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சொத்து பாதுகாப்பு மற்றும் மீட்புக்குழுவின் தலைவர் தங்கபாலு தலைமையிலான குழுவினர், பொள்ளாச்சியில் பயணத்தை முடித்து விட்டு, நேற்று முன்தினம் திருப்பூர் வர இருந்தனர். திடீரென திருப்பூர் மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த சுற்றுப்பயணத்தை ரத்து செய்து, சென்னை கிளம்பி சென்றனர். தொண்டர்கள் ஏமாற்றமடைந்தனர்.
அகில இந்திய காங்., கமிட்டி செயலாளர் கோபிநாத் பழனியப்பனிடம் கேட்டதற்கு, ''பொள்ளாச்சி பயணத்தை முடித்து விட்டு திருப்பூர் வர இருந்த நிலையில், தலைமையில் இருந்து அவசர அழைப்பு காரணமாக பயணத்தை ரத்து செய்துவிட்டு கிளம்பிச்சென்றனர்.
இருப்பினும், 15 நாட்களுக்கு பின், திட்டமிட்டபடி, திருப்பூர் மாவட்டத்துக்கு சொத்துமீட்புக்குழுவினர் வருவர்,'' என்றார்
- நமது நிருபர் -.