/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கொங்கைத்தீ' தமிழ் நாடகம் வரும் 30, 31ல் அரங்கேற்றம்
/
'கொங்கைத்தீ' தமிழ் நாடகம் வரும் 30, 31ல் அரங்கேற்றம்
'கொங்கைத்தீ' தமிழ் நாடகம் வரும் 30, 31ல் அரங்கேற்றம்
'கொங்கைத்தீ' தமிழ் நாடகம் வரும் 30, 31ல் அரங்கேற்றம்
ADDED : ஆக 20, 2025 09:42 PM
கோவை; 'கொங்கைத் தீ' தமிழ் நாடகம், கோவையில், 30, 31ம் தேதிகளில் அரங்கேற்றப்பட உள்ளது.
நாடக விதைப்பு இயக்கமாக துவங்கிய ஷ்ரத்தா, 15 ஆண்டுகளில் ஏறக்குறைய, 40 நாடக படைப்புகளை தந்துள்ளது. இதன் முத்தாய்ப்பான தயாரிப்பு, சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி எழுதிய ஒரு தமிழ் நாடகம் 'கொங்கைத்தீ'. இது, சிலப்பதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டது. அடக்கி வைக்கப்பட்ட ஒரு பெண்ணின் சீற்றம் குறித்து வெளிப்படுத்துவதாக உள்ளது.
தொழில்நுட்பம் சார்ந்த வா ழ்க்கை முறையில், நமது சமூகம் எவ்வளவு நவீனமாக மாறியிருந்தாலும், வளர்ச்சி அடைந்திருந்தாலும், அடிப்படையில் சமூக அதிகார கட்டமைப்புகள் மாறியுள்ளனவா என்றும் முக்கியமான கேள்விகளை முன்வைக்கிறது இந்நாடகம் .
கண்ணகி, கோவலன், மாதவி கதாபாத்திரங்களின் உளவியல் போக்கை மையப்படுத்தி, ஆணாதிக்க சமூக கட்டமைப்பின் அடக்குமுறை தன்மையை அடிக்கோடிட்டு காட்டுகிறது. சிலப்பதிகாரக் கதையை அடக்கி வைக்கப்பட்ட பெண்ணின் சீற்றமாக சித்தரிக்கிறது.
இந்தக் காப்பியத்தை நவீனப்படுத்தி, தற்போது உள்ள காலகட்டத்துக்கு ஏற்ப ரசிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில், கடந்தாண்டு 4 முறையும், நடப்பாண்டு இதுவரை நான்கு முறையும் நாடகம் நடத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக, கோவையில், 30, 31ம் தேதிகளில், மாலை, 6:30க்கு, ஹோப் காலேஜில் உள்ள கிளஸ்டர் மீடியா இன்ஸ்டிடியூட்டில் அரங்கேற்றப்பட உள்ளது. இக்கதை முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எளிதாக்கப்பட்டு, ரசிக்கும்படி இருக்கும் என, நம்பிக்கை தருகிறார், இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி.
டிக்கெட் முன்பதிவுக்கு: 86084 79472 ஆன்லைன்: www.district.in