sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம் பக்தர்கள் 'ஓம் சக்தி பராசக்தி' கோஷம் முழக்கம் 

/

 கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம் பக்தர்கள் 'ஓம் சக்தி பராசக்தி' கோஷம் முழக்கம் 

 கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம் பக்தர்கள் 'ஓம் சக்தி பராசக்தி' கோஷம் முழக்கம் 

 கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா கோலாகலம் பக்தர்கள் 'ஓம் சக்தி பராசக்தி' கோஷம் முழக்கம் 


ADDED : மார் 05, 2026 06:35 AM

Google News

ADDED : மார் 05, 2026 06:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் பக்தர்கள் சூழ மேள தாளங்கள் முழங்க வண்ண மலர்களை தாங்கிய தேர் ஆடி அசைந்து வந்து பக்தர்களை பரவசமடையச் செய்தது.

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் தேர்த் திருவிழா, முகூர்த்தகால் நடுதலுடன் ஜன., 28ல் துவங்கியது. முதல் நிகழ்வான பூச்சாட்டு விழா பிப்., 17 அன்று நடந்தது. பிப்., 23ல் கிராமசாந்தியும்,பிப்., 24 இரவு, 7 மணிக்கு கொடியேற்றமும், பிப்., 27 அன்று மாலை திருவிளக்கு வழிபாடும், நேற்று முன்தினம் கோனியம்மனுக்கு அபிஷேகமும், திருக்கல்யாண வைபவமும் நடந்தது.

இரவு 8:30 மணிக்கு சுவாமி புறப்பாடும் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று காலை 5 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் திருத்தேருக்கு எழுந்தருளினார்.

மதியம் 2:05 மணிக்கு, பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவையாதீனம் குமரகுருபரசுவாமிகள், காமாட்சிபுரம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள், தர்மராஜா திரவுபதியம்மன் மடாலயம் கிருஷ்ணமூர்த்தி சுவாமிகள், கோவை தெற்கு பா.ஜ.,எம்.எல்.ஏ.,வானதி சீனிவாசன், வடக்கு எம்.எல்.ஏ.,அம்மன் அர்ஜுனன் ஆகியோர் தேர் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். ராஜவீதி, ஒப்பணக்காரவீதி, வைசியாள் வீதி, கருப்பகவுண்டர்வீதியை கடந்து தேர்நிலையை அடைந்தது.

தேருக்கு முன் மேளதாளங்கள், தாரை தப்பட்டை, ஜமாப், சிங்காரிமேளம், பஞ்சவாத்தியங்கள் இசைக்க, பக்தர்கள் ஓம்சக்தி, பராசக்தி கோஷம் முழங்கினர்.தேரில் வீற்றிருந்த கோனியம்மனை திரளான பக்தர்கள் தரிசித்தனர்.

கோனியம்மன் தேர்த்திருவிழாவை ஒட்டி நகர வீதிகளில் இனிப்புகளையும், குளிர்பானங்களையும் வழங்கினர். சிலர் பந்தல் அமைத்து சிறப்பு அன்னதானம் பரிமாறினர்.

தேர்செல்லும் வழிப்பாதையில் உள்ள வர்த்தகர்கள், சமூக அமைப்புகளை சார்ந்தவர்கள் நீர்மோர் பந்தல் அமைத்து பக்தர்களின் தாகம் தீர்த்தனர். கடைவீதி பஜார் போலீஸ் ஸ்டேஷன் சார்பில் போலீசார் அம்மனுக்கு சீர்வரிசை சமர்ப்பித்தனர்.






      Dinamalar
      Follow us