/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கவுமார மடாலயத்தில் கோடி அர்ச்சனை பெருவிழா
/
கவுமார மடாலயத்தில் கோடி அர்ச்சனை பெருவிழா
ADDED : ஜூலை 24, 2025 09:41 PM

கோவை; கோவை கவுமார மடாலயத்தில் வேல் வழிபாடு, கோடி நாம அர்ச்சனை பெருவிழா நேற்று துவங்கியது.
கோவை சின்னவேடம்பட்டியில் உள்ள கவுமார மடாலயத்தில் கோடி அர்ச்சனை பெருவிழா நேற்று துவங்கியது. வரும் ஜூலை 28 வரை முருகனின் நாமம், 'ஓம் சரவணபவ' கோடி முறை உச்சரிக்கப்படுகிறது. ஆறு ஓதுவா மூர்த்திகளும், 150 திருத்தொண்டர்களும் எட்டு நாட்கள் 150 வேல் வைத்து காலை, முற்பகல், மாலை என திருநீறால் அர்ச்சனை செய்து வருகின்றனர்.
கோடி அர்ச்சனை நிறைவு நாளான ஜூலை 29ல், நாண்மங்கல விழா நடக்கிறது. பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகள். சாதுசண்முக அடிகள், முத்து சிவராமசாமி அடிகள் பங்கேற்கின்றனர்.
கோடி அர்ச்சனை திருவிழா குறித்து கவுமார மடாலய குமரகுருபர சாமிகள் கூறுகையில், ''முருக பெருமானுக்கு ஆயுதங்களை வைத்து அர்ச்சனை செய்வது சிறப்பு. பிற தெய்வங்களுக்கு இல்லாத சிறப்பாக வேல் வைத்து, மந்திரம் சொல்லி கோடி முறை அர்ச்சனை செய்யப்படுகிறது. நான்கு ஆண்டுகளாக இந்த வேல் வழிபாடு கவுமார மடாலயத்தில் நடந்து வருகிறது. வயது வித்தியாசமின்றி, அனைவரும் இதில் பங்கேற்று வழிபட்டு வருகின்றனர்,” என்றார்.