/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி தெற்கு மண்டல கூட்டம்
/
மாநகராட்சி தெற்கு மண்டல கூட்டம்
ADDED : ஆக 29, 2011 11:51 PM
கோவை : கோவை மாநகராட்சி தெற்கு மண்டல மாதாந்திர கூட்டம், பிரதான அலுவலக வளாக கூட்டரங்கில் நேற்று நடந்தது.தெற்கு மண்டல தலைவர் பைந்தமிழ்பாரி தலைமை வகித்து பேசுகையில், ''இன்று நடக்கும் 2011-12ம் நிதி ஆண்டின் மூன்றாவது கூட்டத்தில் 69 பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி ஒப்புதல் வழங்கப்பட உள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் 18 வார்டுகளில் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்பவும், பிரச்னைகளின் அடிப்படையிலும் வார்டு வளர்ச்சிக்கும் பல உள்கட்டமைப்பு வசதி, தெருவிளக்குகள் அமைத்தல், குடிநீர் வினியோக பணிகள், ஆழ்குழாய் கிணற்று பணிகள் உள்ளிட்டவை செய்து முடிக்கப்பட்டுள்ளன. ''கோவை உள்பட ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களும் பயன்பெறும் வகையில் அவிநாசி ரோட்டில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் பாஸ்போர்ட் அலுவலகம், ரூ.2.25 கோடி மதிப்பில் உக்கடம் மீன் மார்க்கெட் கட்டிடம் உள்பட பல்வேறு நலதிட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன,'' என்றார்.கூட்டத்தில், 69 பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி ஒப்புதல் வழங்கப்பட்டது. மாநகராட்சி சுகாதார குழு தலைவர் நாச்சிமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.