sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மின்சக்தி சிக்கனம்: பள்ளியில் விழிப்புணர்வு

/

மின்சக்தி சிக்கனம்: பள்ளியில் விழிப்புணர்வு

மின்சக்தி சிக்கனம்: பள்ளியில் விழிப்புணர்வு

மின்சக்தி சிக்கனம்: பள்ளியில் விழிப்புணர்வு


ADDED : ஆக 30, 2011 12:19 AM

Google News

ADDED : ஆக 30, 2011 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மண்டல தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மின்சக்தி சிக்கன திட்டம் 'பவர்புல்கோவை' குறித்து பள்ளி மாணவ,மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கோவை மண்டலம், ரோட்டரி கோயமுத்தூர் கேலக்ஸி இணைந்து மின்சக்தி சிக்கன நகரமாக கோவையை மாற்றும் நோக்கில், நாட்டில் முதல் முறையாக 'பவர்புல்கோவை' திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்படி ஒரு லட்சம் பள்ளி, மாணவ, மாணவியரிடம் மின்சக்தி சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிகளுக்கு, மின்வாரிய அதிகாரிகள் நேரடியாக சென்று விளக்கமளிக்கின்றனர். மின் நுகர்வோர் கையேடு மற்றும் மின்சக்தி சிக்கனம் குறித்த கேள்விகள் அடங்கிய கருத்துகேட்பு படிவத்தை மாணவ, மாணவியருக்கு வழங்கி வருகின்றனர். டவுன்ஹால், பெரியகடை வீதியிலுள்ள புனித மைக்கேல் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், கோவை மண்டல மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் திருமூர்த்தி தலைமை வகித்தார். மின்சக்தி சேமிப்பதற்கான வழிமுறைகள், வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் மின்பாதுகாப்பு,மின்சாரத்தை முறையாக பயன்படுத்துதல் மற்றும் மின்திருட்டு குறித்த விழிப்புணர்வு உள்ளிட்டவை குறித்து அவர் பேசினார். மின்வாரிய செயற்பாறியாளர்(மையம்) தங்கராஜ், பள்ளி முதல்வர் லூயிஸ் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us