sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விளாங்குறிச்சி - காந்திபுரம் இடையே புதிய பஸ்கள் போக்குவரத்து துவக்கம்

/

விளாங்குறிச்சி - காந்திபுரம் இடையே புதிய பஸ்கள் போக்குவரத்து துவக்கம்

விளாங்குறிச்சி - காந்திபுரம் இடையே புதிய பஸ்கள் போக்குவரத்து துவக்கம்

விளாங்குறிச்சி - காந்திபுரம் இடையே புதிய பஸ்கள் போக்குவரத்து துவக்கம்


ADDED : ஆக 30, 2011 12:25 AM

Google News

ADDED : ஆக 30, 2011 12:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : விளாங்குறிச்சி-காந்திபுரம் வழித்தடத்தில், 100, 100 'சி' என்ற எண்களில் இரண்டு புதிய அரசு பஸ் போக்குவரத்து துவக்கப்பட்டுள்ளது.சேரன் மாநகர் - காந்திபுரம் இடையே ஏற்கெனவே இதே எண்களில் இரு அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இதில், தடம் எண் 100: சேரன்மாநகரிலிருந்து ஹோப்காலேஜ், லட்சுமில்ஸ் வழியாக காந்திபுரம் சென்று கணபதி, விநாயகபுரம் வழியாக மீண்டும் சேரன்மாநகர் வந்தடைகிறது. தடம் எண் 100 சி: சேரன்மாநகரிலிருந்து விநாயகபுரம், கணபதி வழியாக காந்திபுரம் சென்று லட்சுமில்ஸ், ஹோப்காலேஜ் வழியாக சேரன்மாநகர் வந்தடைகிறது. இந்த பஸ்களை விளாங்குறிச்சி மக்கள் பயன்படுத்த முடியாத நிலை இருந்தது. விளாங்குறிச்சி பகுதியிலுள்ள மக்கள் பயன்பெறும் வகையில் தற்போது விளாங்குறிச்சி- காந்திபுரம் வழித்தடத்தில் 100, 100 'சி' என்ற எண்களில் இரு அரசு பஸ்கள் இயக்கம் துவக்கப்பட்டுள்ளது.இதன்படி தடம் எண் 100, விளாங்குறிச்சியில் இருந்து புறப்பட்டு,சேரன்மாநகர், ஹோப்காலேஜ்,லட்சுமிமில்ஸ் வழியாக காந்திபுரம் சென்று கணபதி,விநாயகபுரம் வழியாக மீண்டும் விளாங்குறிச்சி வந்தடைகிறது. தடம் எண் 100'சி': விளாங்குறிச்சியிலிருந்து புறப்பட்டு விநாயகபுரம், கணபதி வழியாக காந்திபுரம் சென்று லட்சுமில்ஸ், ஹோப்காலேஜ், சேரன்மாநகர் வழியாக மீண்டும் விளாங்குறிச்சி வந்தடைகிறது.விளாங்குறிச்சியில் நடந்த புதிய வழித்தட பஸ்களை, கவுண்டம்பாளையம் அ.தி.மு.க., எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி துவக்கி வைத்தார். விளாங்குறிச்சி ஊராட்சி மன்றத் தலைவி சுமதி, அரசு போக்குவரத்துக் கழக பொது மேலாளார் தேவராஜ், துணை மேலாளர் பிரின்டோ ஸ்டீபன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us