sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இரு பெண்கள் உட்பட 4 பேர் தற்கொலை

/

இரு பெண்கள் உட்பட 4 பேர் தற்கொலை

இரு பெண்கள் உட்பட 4 பேர் தற்கொலை

இரு பெண்கள் உட்பட 4 பேர் தற்கொலை


ADDED : ஆக 30, 2011 12:26 AM

Google News

ADDED : ஆக 30, 2011 12:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவையில் இரு பெண்கள் உட்பட நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டது பற்றி, போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை மாநகரில் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் இரு பெண்கள் உட்பட நான்கு பேர் தற்கொலை செய்து கொண்டனர். தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், டிரைவர்கள் குடியிருப்பைச் சேர்ந்தவர் பொன்னுச்சாமி(29). மன நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த இவர் நேற்று முன்தினம் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.செல்வபுரம், தெற்கு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(26); நகை பட்டறைத் தொழிலாளி. கடந்த 15 நாட்களாக வேலை இல்லாமல் இருந்த இவர், மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். செல்வபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். ரத்தினபுரி, சுப்பிரமணியகவுண்டர் வீதியைச் சேர்ந்த பாபுவின் மகள் செலினா(21).சமையல் செய்யும் போது, சுடிதாரில் தீப்பற்றி காயமடைந்தவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.ரத்தினபுரி போலீசார் விசாரிக்கின்றனர்.வேலாண்டிபாளையத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மனைவி அமலா(22). சில நாட்களுக்கு முன் இவரது சகோதரி அஜிதா, கணவருடன் ஏற்பட்ட தகராறில் பெற்றோர் வீட்டுக்கு வந்தார். அப்போது, அஜிதாவின் கணவர், பாஸ்கருடன் தொடர்பு கொண்டு, மனைவியை தனது வீட்டுக்கு அனுப்பிவைக்கும்படி கேட்டுக் கொண்டார். இதுபற்றி அமலாவும், பாஸ்கரும் பேசிக் கொண்டபோது தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த அமலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.கோவை மத்திய பகுதி மகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us