sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பொள்ளாச்சியில் குறைதீர்ப்பு நாள் கூட்டம்

/

பொள்ளாச்சியில் குறைதீர்ப்பு நாள் கூட்டம்

பொள்ளாச்சியில் குறைதீர்ப்பு நாள் கூட்டம்

பொள்ளாச்சியில் குறைதீர்ப்பு நாள் கூட்டம்


ADDED : ஆக 30, 2011 12:33 AM

Google News

ADDED : ஆக 30, 2011 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு நாள் கூட்டத்தில், வருவாய் கோட்டாட்சியர் அறையில் இருந்து வெளியே வராததால் அனைத்து துறை அதிகாரிகளும் மக்களும் அதிருப்தி அடைந்தனர்.பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடந்தது.

வழக்கமாக மீட்டிங் ஹாலில் வருவாய் கோட்டாட்சியர் அமர்ந்து மக்களிடம் மனுக்கள் பெறுவார். அனைத்து துறை அதிகாரிகள், தாசில்தார், நேர்முக உதவியாளர் ஆகியோர் உடனிருப்பார்கள்.ஆனால், வருவாய் கோட்டாட்சியர் மீனா பிரியாதர்ஷினி நேற்று, மீட்டிங் ஹாலுக்கு வராமல் அவரது அறையில் இருந்து கொண்டே மக்களிடம் மனுக்கள் பெற்றார். மீட்டிங் ஹாலில் மற்ற துறை அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். அதேபோன்று மனுக்கொடுக்க வந்த மக்களும் அதே அறையில் வரிசையில் காத்திருந்தனர். வருவாய் கோட்டாட்சியர் அறைக்குள் மனுதாரர்கள் ஒவ்வொருவராக அனுப்பப்பட்டனர். ஆனால், மனுதாரர்கள் யாரிடமும் எவ்வித விளக்கமும் கேட்டாமல், மனுக்களை மட்டும் பெற்றுக்கொண்டார். இதனால், வருவாய் கோட்டாட்சியர் என்ன சொல்கிறார் என்பதை கூட கேட்க முடியாமல் அனைத்து துறை அதிகாரிகளும் அவதிப்பட்டனர். இதனால் அதிகாரிகளும், மக்களும் அதிருப்தி அடைந்தனர்.குறைதீர்ப்பு நாள் கூட்டம் முடிந்ததும், விநாயகர் சதுர்த்தி விசர்ஜன ஊர்வலம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தையும் அவரது அறையிலேயே கோட்டாட்சியர் நடத்தினார்.வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'குறைதீர்ப்பு நாள் கூட்டம், ஆலோசனை கூட்டம் போன்றவை மீட்டிங் ஹாலில் நடப்பது தான் மரபு. ஆனால், வருவாய் கோட்டாட்சியர் அந்த அறையில் இருந்து கொண்டே மனுக்களை பெற்றார். அவரது செயல்பாட்டில் மற்ற அதிகாரிகள் யாரும் கருத்து தெரிவிக்க முடியாது' என்றனர்.






      Dinamalar
      Follow us