/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
"திட்டக் குழுவின் தகவல் களஞ்சியமாக வேளாண் பல்கலை செயல்பட வேண்டும்'
/
"திட்டக் குழுவின் தகவல் களஞ்சியமாக வேளாண் பல்கலை செயல்பட வேண்டும்'
"திட்டக் குழுவின் தகவல் களஞ்சியமாக வேளாண் பல்கலை செயல்பட வேண்டும்'
"திட்டக் குழுவின் தகவல் களஞ்சியமாக வேளாண் பல்கலை செயல்பட வேண்டும்'
ADDED : செப் 01, 2011 01:53 AM
கோவை : 'வேளாண் துறையின் அனைத்து வளர்ச்சி திட்டங்களிலும் பெண்களின் பங்கு மிகவும் அவசியம்.
பெண்களுக்கேற்ற பண்ணை இயந்திரங்களை விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும்' என, சாந்தா ஷீலா அறிவுறுத்தியுள்ளார்.தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் துணைத்தலைவர் சாந்தா ஷீலா, கோவை வேளாண் பல்கலையை பார்வையிட்டார். பண்ணை அளவில் திட்டமிடுதல், வேளாண் விரிவாக்க முறைகள் மற்றும் மானாவாரி வேளாண்மை குறித்து பல்கலை விஞ்ஞானிகளுடன் விவாதித்தார். பல்கலையை பார்வையிட்டு மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவர் சாந்தா ஷீலா கூறியதாவது:மானாவாரி வேளாண்மை மேம்பாட்டிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் வருவாயை பெருக்க முடியும். கிராமங்களை தத்தெடுத்து வருவாயை பெருக்க உதவும், சுயவேலைவாய்ப்பு திட்டங்களை கண்டறிந்து நடைமுறைப் படுத்த வேண்டும். அனைத்து வேளாண் வளர்ச்சி திட்டங்களிலும், பசுமை எரிசக்தி உற்பத்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.பண்ணை அளவிலான உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை உயர்த்துவதில் வேளாண் விஞ்ஞானிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இயற்கை வள ஆதாரங்கள் மற்றும் சரியான நிலப்பயன்பாடு,வேளாண் மேம்பாட்டிக்கு இன்றியமையாதது. வேளாண் துறையின் அனைத்து வளர்ச்சி திட்டங்களிலும் பெண்களின் பங்கு மிகவும் அவசியம். பெண்களுக்கேற்ற பண்ணை இயந்திரங்களை விஞ்ஞானிகள் உருவாக்க வேண்டும்.மாணவர்களின் ஆராய்ச்சிக் கட்டுரைகள் அனைத்தும் உழவர்கள் பயன்பெறும் வகையில் அமைந்திட வேண்டும். வரும் காலங்களில் வேளாண் பல்கலை, மாநில திட்டக்குழுவிக்கு தகவல் களஞ்சியமாக செயல்பட வேண்டும். மாநில திட்டக்குழுவானது, வேளாண் பல்கலையுடன் நெருங்கிய தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள ஆர்வமாக உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார். துணைவேந்தர் முருகேச பூபதி, கற்பகம் பல்கலை துணைவேந்தர் ராமசாமி, வேளாண் பல்கலை ஆராய்ச்சி இயக்குனர் பரமாத்மா, விரிவாக்க கல்வி இயக்குனர் கலைச்செல்வன், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மைய இயக்குனர் அஜ்ஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.