/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்டேட் பகுதிகளில் யானைகள் உலா
/
எஸ்டேட் பகுதிகளில் யானைகள் உலா
ADDED : செப் 26, 2011 10:45 PM
வால்பாறை : எஸ்டேட் பகுதியில் அடிக்கடி வாக்கிங் வரும் காட்டுயானைகளால் தொழிலாளர்கள் நிம்மதியிழந்து தவிக்கின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை, மானாம்பள்ளி ஆகிய இரண்டு வனச்சரகங்களில் சமீபகாலமாக காட்டுயானை, சிறுத்தை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் நடமாடுகின்றன.குறிப்பாக 60 க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் மயிலாடும்பாறை, பன்னிமேடு, கருமலை, ஹைபாரஸ்ட், ஆனைமுடி, சக்தி-தலநார் உள்ளிட்ட பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் காட்டுயானைகள் தனித்தனி கூட்டமாக பிரிந்து, இரவு நேரத்தில் எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்குள் முகாமிடுகின்றன.காட்டுயானைகள் பகல் நேரத்தில் தேயிலை தோட்டத்தில் ஜாலியாக உலா வருவதாலும், இரவு நேரத்தில் எஸ்டேட் குடியிருப்பு பகுதிக்கு வாக்கிங் செல்வதாலும் தொழிலாளர்கள் பீதியடைந்துள்ளனர்.காட்டுயானைகள் வரவை தடுக்க வனப்பகுதியை சுற்றி அகழி வெட்ட வேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர்.வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:குடியிருப்பு பகுதிகளில் யானைகளுக்கு தேவையான உணவு எளிதில் கிடைப்பதால், தொடர்ந்து எஸ்டேட் பகுதியிலேயே முகாமிடுகின்றன.
இது தவிர யானைகள் வழித்தடத்தை மறித்து, தேயிலை பயிரிட்டுள்ளதாலும் தடம் மாறி குடியிருப்பு பகுதிக்குள் செல்கிறது. ஒரே நேரத்தில் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் காட்டுயானைகள் நுழைந்து அட்டகாசம் செய்வதை தடுக்க போதிய ஊழியர்களும் இல்லை. வாகனவசதியும் இல்லை என்றனர்.