sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பொள்ளாச்சியில் வைகோ இன்று பிரசாரம்

/

பொள்ளாச்சியில் வைகோ இன்று பிரசாரம்

பொள்ளாச்சியில் வைகோ இன்று பிரசாரம்

பொள்ளாச்சியில் வைகோ இன்று பிரசாரம்


ADDED : அக் 04, 2011 01:01 AM

Google News

ADDED : அக் 04, 2011 01:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் நகராட்சி தலைவர் பதவிக்கும், வார்டுகளில் கவுன்சிலர் பதவிக்கும் போட்டியிடும் ம.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து வைகோ இன்று பிரசாரம் செய்கிறார்.சட்டசபை தேர்தலில் இருந்து ஒதுங்கியிருந்த ம.தி.மு.க., உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகிறது.

எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் ம.தி.மு.க., தனித்து போட்டியிடுகிறது. பொள்ளாச்சி நகராட்சி தலைவர் பதவிக்கு குகன்மில் செந்தில் என்கிற செந்தில்குமார் போட்டியிடுகிறார். நகராட்சி மொத்தமுள்ள 36 வார்டுகளில் 26 வார்டு கவுன்சிலர் பதவிக்கு ம.தி.மு.க.,வினர் போட்டியிடுகின்றனர்.ம.தி.மு.க., வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, பொள்ளாச்சியில் இன்று தேர்தல் பிரசாரம் செய்கிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் பிரசாரம் முடிந்ததும், இன்று காலை 9.30 மணிக்கு பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டியில் பிரசாரத்தை துவங்குகிறார். தொடர்ந்து தேர்நிலையம், பத்ரகாளியம்மன் கோவில் வீதி, கடைவீதி, ராஜாமில் ரோடு, குமரன்நகர், கோவை ரோடு, பஸ் நிலையம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்கிறார்.நிகழ்ச்சியில் ம.தி. மு.க., மாவட்ட செயலாளர் ஈஸ்வரன், தலைவர் பதவிக்கான வேட்பாளர் செந்தில்குமார் மற்றும் வார்டு வேட்பாளர்கள் கலந்து கொள்கின்றனர்.








      Dinamalar
      Follow us