sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 08, 2026 ,மாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நில மோசடி: இருவருக்கு ஜாமின்

/

நில மோசடி: இருவருக்கு ஜாமின்

நில மோசடி: இருவருக்கு ஜாமின்

நில மோசடி: இருவருக்கு ஜாமின்


ADDED : அக் 08, 2011 12:14 AM

Google News

ADDED : அக் 08, 2011 12:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : பத்து கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் கைதான தி.மு.க.,பிரமுகர்கள் இருவர் ஐகோர்ட் நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.சிங்காநல்லூரைச் சேர்ந்த கருப்புசாமி என்பவரின் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக மாஜி அமைச்சர் பழனிசாமியின் மகன் பைந்தமிழ் மற்றும் தி.மு.க.,பிரமுகர்கள் பசுபதி, காயத்திரி பாலன், மீன்கடை சிவா உள்ளிட்டோர் குற்றம் சாட்டப்பட்டனர்.

இவர்களில் பைந்தமிழ், பசுபதி, காயத்திரிபாலன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.இவர்களில் பசுபதி,காயத்திரி பாலன் ஆகியோரின் ஜாமின் மனுவை, மாவட்ட நீதிமன்றம் சமீபத்தில் டிஸ்மிஸ் செய்தது. இதனைத் தொடர்ந்து சென்னை ஐகோர்ட் இவர்களுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது.நிபந்தனைப்படி நேற்று கோவை ஜே.எம்.எண்:8 கோர்ட்டில் உத்தரவாதப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. மாலை இருவரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.இவ்வழக்கில் தேடப்படும் மீன்கடை சிவாவின் முன்ஜாமின் மனு வரும் 10ல் விசாரணைக்கு வருகிறது. அதுவரை கைது செய்யக்கூடாது என ஐகோர்ட் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.








      Dinamalar
      Follow us