sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

திருமூர்த்தி அணையில் பிளாஸ்டிக் கழிவு அகற்றம்

/

திருமூர்த்தி அணையில் பிளாஸ்டிக் கழிவு அகற்றம்

திருமூர்த்தி அணையில் பிளாஸ்டிக் கழிவு அகற்றம்

திருமூர்த்தி அணையில் பிளாஸ்டிக் கழிவு அகற்றம்


ADDED : அக் 10, 2011 10:25 PM

Google News

ADDED : அக் 10, 2011 10:25 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை மக்கள் பேரவை சார்பில், திருமூர்த்திஅணை மற்றும் சுற்றுப்பகுதிகளில், பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.உடுமலை மக்கள் பேரவையின் பசுமையான, தூய்மையான உடுமலை என்ற திட்டத்தின் கீழ் திருமூர்த்தி அணையின் கரை ஓரங்களில், பல ஆண்டுகளாகத் தேங்கியிருந்த அசுத்தங்களையும், பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள் மற்றும் துணிக் கழிவுகளையும் வெளியேற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இதில், உடுமலை அரசு கலைக்கல்லூரியை சேர்ந்த மாணவ, மாணவிகளும், உடுமலை மக்கள் பேரவை ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் சிவசண்முகம், பாலசுந்தரம் உட்பட பலர் பங்கேற்றனர்.மாலையில், உடுமலை மக்கள் பேரவை மற்றும் உடுமலை நகைச்சுவை மன்றம் சார்பில், முப்பெரும் விழா உடுமலை இந்திய மருத்துவ சங்க கட்டத்தில், நடந்தது.மக்கள் பேரவையின் துணைத்தலைவர் முத்துக்குமாரசாமி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் வரவேற்றார். தேசிய, மாநில நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.உடுமலையில், கடந்த 30 ஆண்டுகளாக இலவசமாக யோகாசன பயிற்சியளித்து வரும் மணி மற்றும் ரங்கசாமிக்கு பாராட்டு பத்திரம் வழங்கப்பட்டது.உடுமலை இந்திய மருத்துவ சங்கத்தின் 'லைப் பீட்' என்ற திட்டத்தின் கீழ் 25ஆயிரம் ரூபாய் சின்னவீரம்பட்டியை சேர்ந்த ஏழைச்சிறுமியின் இதய சிகிச்சைக்காக வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us