/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கே.பி.எம்., பள்ளியில் ஆண்டு விழா உற்சாகம்
/
கே.பி.எம்., பள்ளியில் ஆண்டு விழா உற்சாகம்
ADDED : ஜன 15, 2024 10:56 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை;ஈச்சனாரியில் உள்ள கே.பி.எம்., மெட்ரிக்., பள்ளியின் ஆண்டு விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்தாண்டுக்கான விழா, உலக கலை மற்றும் கலாசாரத்தை சித்தரிக்கும் வகையில், 'விஸ்வ மஹோத்சவ்' என்ற பெயரில் கொண்டாடப்பட்டது. மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின.
விழாவுக்கு சிறப்பு விருந்தினராக, சச்சிதானந்த ஜோதி நிகேதன் பள்ளியின் செயலாளர் கவிதாசன் பங்கேற்று, மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். ரத்தினம் கல்வி குழும நிறுவனங்களின் தலைவர் மதன் செந்தில், பள்ளி தாளாளர் ஷீமா, ஆலோசகர் கருணாநிதி, முதல்வர் அகிலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.