UPDATED : நவ 17, 2026 01:42 PM
ADDED : நவ 17, 2026 01:42 PM

கோவை: கே.பி.ஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரியில், ஐஜென் – ஹெஸ்டா அமைப்புடனான கூட்டாண்மை துவக்க விழா நடந்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சி இலக்குகளை கல்வி, ஆராய்ச்சி, புதுமையான கண்டுபிடிப்புகளுடன் ஒருங்கிணைப்பதே இக்கூட்டாண்மையின் நோக்கமாகும்.
பத்ம பூஷண் விருது பெற்ற, ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு அமைப்பின் முன்னாள் தலைமை அலுவலர் சிவதாணு பிள்ளை சிறப்பு விருந்தினராக பங்கேற்று கல்லுாரி முதல்வரிடம் கூட்டாண்மை உறுப்பினர் சான்றிதழை வழங்கினார். நிலையான எதிர்காலத்தை உருவாக்குவதில் புதுமையான கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார்.
நிலையான வளர்ச்சிக்கான 17 பேராசிரியர்கள் முன்னோடிகளாக அங்கீகரிக்கப்பட்டு, அடையாளவில்லைகளும் பொறுப்பு ஆணைகளும் வழங்கப்பட்டன. எனது நிலையான வளர்ச்சி இலக்கு, எனது பொறுப்பு, திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
